எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாப்புலர் பிரண்ட் அமைப்பை தடை செய்ய மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சதி திட்டங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் 15 மாநிலங்களில் உள்ள அந்த அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. தேசிய புலனாய்வு முகமையும், அமலாக்கத்துறையும் இணைந்து நடத்திய இந்த சோதனை நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்தது.
இந்த சோதனையை தொடர்ந்து 106 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் 10 பேர் கைதாகி இருக்கிறார்கள். இவர்களை டெல்லியில் வைத்து தீவிர விசாரணை நடத்த என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த சோதனையின்போது ஏராளமான ஆவணங்கள், கம்ப்யூட்டர்கள், செல்போன்கள் மற்றும் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகிறார்கள். அதன் அடிப்படையிலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இருந்து கோரிக்கை விடப்பட்டு உள்ளது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
ஏற்கனவே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக அந்த அமைப்பு செய்து வரும் சட்ட விரோத செயல்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகளும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் தொகுத்து உள்ளனர்.
இவற்றின் அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பை நாடு முழுவதும் தடை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு வளைகுடா நாடுகளில் நெட் வொர்க் அமைத்து மிகப்பெரிய அளவில் பல கோடி ரூபாய் நிதி திரட்டி இருப்பதை அமலாக்கத்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து உள்ளனர். இதற்கான ஆதாரங்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக 2009-ம் ஆண்டு முதல் வளைகுடா நாடுகளில் இருந்து 60 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் பெறப்பட்டுள்ளது.
சதி திட்டத்தின் அடிப்படையில் இந்த பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். யார், யாருக்கு பணம் சென்றிருக்கிறது என்ற தகவல்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சேகரித்து உள்ளனர். நாடு முழுவதும் சுமார் 2,600 பேருக்கு இந்த வகையில் பண பரிமாற்றம் நடந்துள்ளது. அவர்கள் மூலம் பா.ஜனதா ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
இப்படி அமலாக்கத்துறையும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் தொகுக்கப்பட்டு உள்ளன. இவற்றை காரணம் காட்டி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிரந்தரமாக தடை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 5 days ago |
-
25 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்: பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
03 Dec 2024சென்னை, பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கிய நிலையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் செயற்கைகோளுடன் இன்று விண்ணில் பாய்கிறது.
-
4 மாவட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
03 Dec 2024சென்னை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
-
ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: நியாயமான இழப்பீடு வழங்க ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை
03 Dec 2024சென்னை, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான இழப்பீட்டினை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
ஆஸி. வாரியத்திற்கு புதிய தலைவர்
03 Dec 2024ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ஹாக்லியின் பதவிக்காலம் 2025 மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
-
தமிழகத்திற்கு மத்திய குழுவை விரைவில் அனுப்ப வேண்டும்: பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
03 Dec 2024புதுடெல்லி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள தமிழகத்திற்கு மத்திய குழுவை விரைவில் அனுப்பிட வேண்டும் என்று பிரதமரிடம் தொலைபேசியில் பேசியபோது வல
-
புயல் நிவாரண நிதியை உடனே வழங்க பார்லி.யில் வைகோ வலியுறுத்தல்
03 Dec 2024புதுடெல்லி : தமிழகத்திற்கு புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
-
குஜராத்: தொழிற்சாலையில் வெடி விபத்தில் 4 பேர் பலி
03 Dec 2024காந்திநகர் : குஜராத்தில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
குறிப்பிட்ட ஒரு நாட்டல் அதிக சதங்கள்: பிராட்மேன் சாதனையை சமன் செய்கிறார் கோலி
03 Dec 2024அடிலெய்டு : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதமடித்து அசத்திய நிலையில், இன்னும் ஒரு சதம் அடித்தால், அவர், டான் பிராட்மேனின் உலக சாதனையை சமன
-
40-க்கும் குறைவான பந்துகளில் 2 சதங்கள்: டி-20 கிரிக்கெட் போட்டியில் உர்வில் படேல் உலக சாதனை
03 Dec 2024இந்தூர் : 40-க்கும் குறைவான பந்துகளில் 2 சதங்கள் அடித்து டி20 கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளார் இந்திய உள்ளூர் வீரர் உர்வில் படேல்.
-
விழுப்புரத்தில் மின் கம்பங்களை விரைவில் சீரமைக்க வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு
03 Dec 2024சென்னை, விழுப்புரத்தில் புயலால் சேதமடைந்த மின் கம்பங்களை விரைந்து சீரமைக்க அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
-
மண்சரிவுக்கான காரணம் என்ன? - தி.மலையில் ஐ.ஐ.டி. குழு ஆய்வு
03 Dec 2024தி.மலை : மண்சரிவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி குழு ஆய்வு நேற்று செய்தனர்.
-
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது
03 Dec 2024காரைக்கால் : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.
-
உ.பி. சம்பல் மாவட்டத்திற்கு ராகுல் இன்று செல்ல திட்டம்
03 Dec 2024லக்னோ : உ.பி.யில் பாதிக்கப்பட்ட சம்பல் மாவட்டத்திற்கு நாளை ராகுல் காந்தி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
03 Dec 2024சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து நேற்று விற்பனையானது.
-
உயர்கல்வியில் திறமைவாய்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளனர் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
03 Dec 2024சென்னை, மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது என்று தெரிவித்த அமைச்சர் கோவி.செழியன், உயர்கல்வியில் திறமைவாய்ந்த ஆசிரி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-12-2024.
04 Dec 2024 -
நமீபியாவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்
04 Dec 2024விண்ட்ஹோக்: நமீபியாவின் ஜனாதிபதியாக முதல் முறையாக ஒரு பெண் பதவியேற்க உள்ளார்.
-
மலேசியா, தாய்லாந்தில் மழை,வெள்ளத்திற்கு 30 பேர் உயிரிழப்பு
04 Dec 2024கோலாலம்பூர்: மலேசியா மற்றும் தாய்லாந்தில் பெய்த மழை வெள்ளத்திற்கு இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இந்திய கடற்படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
04 Dec 2024புது டெல்லி: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ம் தேதியை கடற்படை தினமாக இந்தியா கொண்டாடுகிறது.
-
புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும்: பினராய் அறிவிப்பு
04 Dec 2024திருவனந்தபுரம்: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என்று அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
-
1.17பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்தியாவிற்கு ஹெலிகாப்டர் உபகரணங்கள் வழங்க அதிபர் பைடன் நிர்வாகம் ஒப்புதல்
04 Dec 2024வாஷிங்டன்: 1.17பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்தியாவிற்கு மல்டி மிஷன் ஹெலிகாப்டர் உபகரணங்களை வழங்குவதற்கு அதிபர் பைடன் நிர்வாகம் ஒப்புதல்அளித்துள்ளது.
-
சம்பல் மாவட்டத்திற்கு செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம் பிரியங்கா காந்தி கண்டனம்
04 Dec 2024லக்னோ: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள சம்பல் மாவட்டத்திற்கு செல்ல முயன்ற ராகுல், பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
-
நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
04 Dec 2024புது டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நேற்று நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுப
-
தொழில்நுட்ப கோளாறு: பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் இன்றைக்கு ஒத்திவைப்பு
04 Dec 2024சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
-
வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
04 Dec 2024சென்னை: வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரையாண்டுத் தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.