முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு : ராணி எலிசபெத் நினைவாக விருது

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      உலகம்
Suyella 2022-09-25

Source: provided

லண்டன்: ஆண்டின் சிறந்த பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றார்.

மறைந்த இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் நினைவாக அவரது பெயரில் முதன்முறையாக இந்த ஆண்டு முதல் ராணி எலிசபெத் II விருது வழங்கும் விழா லண்டனில் நடந்தது. அதில், ஆண்டின் சிறந்த பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் விருதை வென்றார். அவருடைய பெற்றோர் அவர் சார்பாக விருதை பெற்றுக் கொண்டனர். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன், லண்டனில் வாழ்ந்து வரும் தமிழகத்தை சேர்ந்த உமா மற்றும் கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் தம்பதியருக்கு மகளாக பிறந்தவர் ஆவார். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், இங்கிலாந்தின் புதிய பிரதமர் லிஸ் டிரஸ் அமைச்சரவையில் உள்துறை செயலாளராக 42 வயதான சுயெல்லா பிரேவர்மேன் நியமிக்கப்பட்டார். லண்டனில் நடந்த விழாவில் காணொலி மூலம் பேசிய சுயெல்லா பிரேவர்மேன், ஆசிய சாதனையாளர் விருதுகள்  விழாவில், புதிய பாத்திரத்தை ஏற்பதை தன் வாழ்நாள் பெருமையாக கருதுவதாக தெரிவித்தார். இந்த உயரிய விருதை, மறைந்த இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து