முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலியஸ் கோப்பை செஸ்: மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன்

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022      விளையாட்டு
Carlsen 2022--09-26

Source: provided

ஜூலியஸ் கோப்பை சர்வதேச செஸ் தொடரில் நார்வேவைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்று உள்ளார். இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய இளம் வீரர் அர்ஜுன் எரிகேசி உடன் கார்ல்சன் மோதினார்.

ஆன்லைன் மூலம் 2 சுற்றுகளாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2க்கு பூஜ்யம் என்ற புள்ளிக் கணக்கில் கார்ல்சன் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த அர்ஜுன் எரிகேசி 2ம் இடத்தை பிடித்தார். சாம்பியன் பட்டம் வென்ற கார்ல்சனுக்கு இந்திய மதிப்பில் 20 லட்சம் ரூபாயும், 2ம் இடம் பிடித்த எரிகேசிக்கு 12 லட்சம் ரூபாயும் பரிசாக அளிக்கப்பட்டது.

________

நியூசி., 'ஏ'-க்கு எதிரான போட்டி இந்திய 'ஏ' அணி அபார வெற்றி

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து ஏ அணி, இந்திய ஏ அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற முறையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், நேற்று 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து ஏ அணி முதலில் பேட் செய்தது. 47 ஓவர்களில் 219 ரன்களுக்கு அந்த அணி ஆல்-அவுட் ஆனது. இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் சாதனை உள்பட 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய ஏ அணி 34 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 222 ரன்கள் அடித்ததுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் பிரித்வி ஷா 77 ரன்கள் குவித்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 'ஏ' அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

________

மன்கட் அவுட் சர்ச்சை: தீப்தி சர்மா கருத்து

இங்கிலாந்திற்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் நடந்த சம்பவம் குறித்து தீப்தி சர்மா விவரித்துள்ளார். “அது எங்கள் திட்டம் தான். ஏனெனில் அவர் பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பே கிரீஸை விட்டு வெளியேறி ரன் எடுக்க முயன்றார். அது குறித்து அவரிடம் சில முறை எச்சரித்து இருந்தோம். ஆனால் அவர் அதனை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தார். அதனால் விதிகளுக்கு உட்பட்டு அவுட் செய்தோம். இதில் தவறு ஏதும் இல்லை” என தீப்தி தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் தனது ஆதரவை தீப்திக்கு வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி தான் இந்திய அணியின் அனுபவ பந்து வீச்சாளர் ஜூலான் கோஸ்வாமியின் கடைசி போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

________

இந்திய-ஆஸ்திரேலியா போட்டி: நேரில் பார்த்த கவர்னர் தமிழிசை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இந்தத் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றவாது டி20 போட்டி தொடரின் வெற்றியாளரை முடிவு செய்யும் போட்டியாக அமைந்தது. கிட்டத்தட்ட ஒரு ஃபைனல் போட்டியை போல இருந்தது. போட்டியை நேரில் கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்திருந்தனர். அவர்களில் ஒருவராக ஆளுநர் தமிழிசையும் இருந்தார்.

“தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்தேன். மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று தொடரை வென்று நம் தாய் திருநாட்டிற்கு பெருமை சேர்த்த நம் இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து