முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேதியியல் துறைக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

புதன்கிழமை, 5 அக்டோபர் 2022      உலகம்
Nobel-Prize 2022--10-05

Source: provided

ஸ்டோக்ஹோம் : 2022-ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. 

உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசு விளங்குகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி 2022-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டதில், அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக சுவீடனை சேர்ந்த ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 2022-ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டுக்கான இயற்பியல் பரிசை 3 பேர் பெறுகின்றனர். அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப். கிளாசர், அன்டன் ஜெய்லிஙர் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. குவாண்டம் தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு வழங்கப்படுவதாக தேர்வுக்குழு நேற்று அறிவித்துள்ளது. இதன்படி இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூலக்கூறுகளை ஒன்றிணைக்கும் வழியை உருவாக்கியதற்காக கரோலின் ஆர். பெர்டோசி (அமெரிக்கா), மோர்டன் மெல்டல் (டென்மார்க்) மற்றும் கே. பேரி ஷார்ப்லெஸ் (அமெரிக்கா) ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

2022-ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்றும், அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு திங்கட்கிழமையும் அறிவிக்கப்பட உள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து