முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரோ பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்: ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் சோதனை வெற்றி

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      இந்தியா
ISRO 2024-09-09

Source: provided

சென்னை : மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான பாராசூட் சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவு திட்டம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம். இந்த திட்டத்தின்படி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் 3 இந்திய விண்வெளி வீரர்களை பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்குத் திரும்ப அழைத்து வருவது தான் நோக்கமாகும். இதனை வருகிற 2027-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

இதற்கு முன்பாக 3 ஆள் இல்லாத ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது. இதில் முதல் ராக்கெட் இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில் ‘வியோமித்ரா' என்ற பெண் ரோபோ பயணிக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திட்டத்தின் சோதனை பணிகள் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு கட்ட சோதனைகளை நடத்தி வருகின்றனார். குறிப்பாக விண்வெளிக்கு சென்று திரும்பும் விண்வெளி வீரர்களை பத்திரமாக கடலில் தரையிறக்குவதற்கு பயன்படுத்தப்படும் பாராசூட் சோதனைகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் கடல் பகுதி மற்றும் நிலப்பரப்புகளிலும் செய்து வருகின்றனர்.

அந்தவகையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள ராணுவப் பயிற்சிப் பகுதியான பாபினா பீல்ட் பயரிங் ரேஞ்சில், ககன்யான் பணிக்கான முக்கிய ஒருங்கிணைந்த பிரதான ‘பாராசூட் ஏர் டிராப்’ சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து