முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சற்று குறைந்த தங்கம் விலை

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      தமிழகம்
Gold 2024-10-28

Source: provided

சென்னை : தங்கம் விலை நேற்று சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது.  

தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஜெட் வேகத்தில் சென்ற தங்கம் விலை படிப்படியாக குறையத்தொடங்கியது. இது சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அதேநேரத்தில் இன்னும் விலை உயர்ந்துகொண்டே செல்லும் என்று நினைத்து தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.

இதன்படி தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 22-ந்தேதியில் இருந்து சரிவை சந்தித்து வந்தது. கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த 4-ந்தேதி ஒரு சவரன் ரூ.90 ஆயிரம் என்ற நிலைக்கு வந்தது. விலை ஏற்ற-இறக்கம் என்ற நிலையிலேயே கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் விலை அதிகரித்து காணப்பட்டது. அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.1,440-க்கு உயர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் விலை அதிகரித்தது. அதன்படி, கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரு கிராம் ரூ.11,480-க்கும், ஒரு சவரன் ரூ.91,840-க்கும் விற்பனை ஆனது. நேற்று முன்தினம் நிலவரப்படி, கிராமுக்கு ரூ.220-ம், சவரனுக்கு ரூ.1,760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,700-க் கும், ஒரு சவரன் ரூ.93,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 600-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்து 800-க்கும் விற்பனையானது.  இந்நிலையில் வெள்ளி விலை நேற்றும் அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 உயர்ந்து ஒரு கிராம் ரூ.173 க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 73 ஆயிரத்திற்கும் விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து