Idhayam Matrimony

டிச. 17-ல் சிறை நிரப்பு போராட்டம்: அன்புமணி

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      தமிழகம்
Anbumani 2024-12-29

Source: provided

சென்னை : டிசம்பர் 17-ல் சிறை நிரப்பு போராட்டம் நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை அக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

என் வாழ்க்கை முழுவதும் கட்சிக்கும், அய்யாவிற்குதான் உழைத்தேன். இனியும் அதுபோலத்தான் உழைப்பேன். தேர்தலில் மாம்பழம் சின்னத்தை ஒதுக்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் நமக்குதான் அளித்துள்ளது. யார் கோர்ட்டுக்கு சென்றாலும். எங்கு சென்றாலும் அதை ஒன் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் 5 மாதத்தில் எம்,எல்.ஏ.க்கள், அமைச்சர்களாக போகிறீர்கள். அதனால் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைகளை ஆழமாக தெரிந்துகொள்ள வேண்டும். மேலோட்டமாக இருந்தால் வேலைக்காகாது.

வன்னியர்களுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 17-,ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். 15 சதவீத இட ஒதுக்கீடு 243 தொகுதிகளிலும் போராட்டம் நடைபெறும். சிறிய பிரச்சினை கூட நடக்காமல் லட்சக்கணக்கான தொண்டர்கள் கைதாக வேண்டும். லட்சக் கணக்கான மக்கள் சிறைக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் போராட்டம் வெல்லும். மக்கள் பிரச்சினைகள், கோரிக்கைகளுக்காக பாமகவினர் போராட்டங்களை நடத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், இளைஞர் சங்கம் , மாணவர் சங்கம் மற்றும் மகளிர் சங்கம் ஆகியவற்றின் மாநில செயலாளர்கள் மற்றும் தலைமையிலிருந்து அழைப்பு விடுக்கப்படும் மாநிலத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து