முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாயத்து ராஜ் நிலைக் குழுவின் தலைவராக நியமனம்: முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கனிமொழி எம்.பி.

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      தமிழகம்
Kanimozhi 2022-10-06

Source: provided

சென்னை: மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தி.மு.க. எம்.பி. கனிமொழி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் தலைவராக தி.மு.க. எம்.பி. கனிமொழியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் கனிமொழி எம்.பி. சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

முன்னதாக, மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களவை உறுப்பினர்கள் 17 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் இந்த ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலைக்குழுவின் தலைவராக தி.மு.க. எம்.பி. கனிமொழி நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து