எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லண்டன்: இங்கிலாந்து பிரதமராக தேர்வாகி உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது வாழ்க்கை குறிப்பு பற்றிய விவரம் வருமாறு:-
ரிஷி சுனக்கின் (வயது 42) . அவரது தாத்தா இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரது பெயர் ராம்தாஸ் சுனக். பஞ்சாப்புக்கு உட்பட்ட குஜ்ரன்வாலா பகுதிதான் அவரது பூர்வீகம் ஆகும். நாடுகள் பிரிக்கப்பட்டபோது அந்த பகுதி பாகிஸ்தானுக்குசென்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்த ராம்தாஸ் சுனக், கிளர்க்காக தனது பணியை தொடங்கினார்.
பின்னர் அவர் இந்தியாவில் இருந்து 1935-ம் ஆண்டு கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு உட்பட்ட நைரோபிக்கு சென்றார். 1937-ம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த சுஹாக் ராணி சுனக் என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்தான் ரிஷி சுனக்கின் தந்தை யஷ்வீர் சுனக். அவர் கென்யாவில் பிறந்தார். அவரது தாய் உஷா, டான்சானியாவில் பிறந்தவர் ஆவார். இவர்கள் அனைவரும் 1960-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு புலம்பெயர்ந்தனர்.
டாக்டரான யஷ்வீரும், மருந்தளுனரான உஷாவும் இங்கிலாந்தின் ஹாம்பிசைர் மாகாணம் சவுத்தாம்ப்டன் நகரில் மருந்தகம் ஒன்றை அமைத்து தொழில் செய்து வந்தனர். ஹாம்ப்சைரில் பள்ளிப்படிப்பை முடித்த ரிஷி சுனக், பின்னர் வின்செஸ்டரில் உள்ள ஆண்கள் பள்ளியில் அங்கேயே தங்கி படித்தார். அவர் அங்கு மாணவர் தலைவராக விளங்கினார். பின்னர் அவர் 2001-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட லிங்கோல்ன் கல்லூரியில் சேர்ந்து தத்துவம், அரசியல், பொருளாதார பிரிவில் பட்டம் பெற்றார்.
இந்த நேரத்தில் அவர் கன்சர்வேடிவ் கட்சியில் சேர்ந்து பயிற்சி பெற்று, அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார். 2006-ம் ஆண்டு அவர் ஸ்டாண்ட்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார். பின்னர் ஒரு வங்கியில் ஆலோசகராக பணியில் சேர்ந்த ரிஷி சுனக், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி தனது திறமையை நிரூபித்தார். மேலும் அவர் இங்கிலாந்தில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நாராயணமூர்த்திக்கு சொந்தமான கேட்டர்மாரன் வென்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக பணியில் சேர்ந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு முழுமையாக அரசியல் பிரவேசம் மேற்கொண்ட ரிஷி சுனக், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் யார்க்சைர் மாகாணத்தில் உள்ள ரிச்மண்ட் தொகுதியில் போட்டியிட்டு இங்கிலாந்து நாடாளுமன்றத்துக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு கருப்பு மற்றும் சிறுபான்மையின மக்களின் தலைவராக ரிஷி சுனக் நியமிக்கப்பட்டார். அதையடுத்து 2015-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலிலும் ரிஷி சுனக் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
2017-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றிபெற்ற ரிஷி சுனக், தனது ஆதரவு பலத்தை நிரூபித்தார். இதையடுத்து அவரை அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டின் பொருளாதார தலைமை செயலாளராக நியமித்தார். 2019-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற ரிஷி சுனக், இங்கிலாந்து நாட்டின் உயரிய பதவியான கருவூல தலைவரான நியமிக்கப்பட்டார்.
அப்போது இங்கிலாந்து கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியது. அந்த சமயத்திலும் ரிஷி சுனக் திறம்பட பட்ஜெட் தாக்கல் செய்தார். வரி விலக்குகளை அறிவித்தார். மேலும் கேபினட் மந்திரியாக பதவி வகித்த ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன், மேட் ஹான்காக், மைக்கேல் கோவ் உள்ளிட்ட தலைவர்களுடன் சேர்ந்து கொரோனா காலத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க காரணமாக இருந்தார்.
குறிப்பாக இவர் கொரோனா காலத்தில் பணியாளர் தக்கவைப்பு திட்டத்தை அமல்படுத்தினார். இந்த திட்டத்திற்கு அரசு முக்கியத்துவம் கொடுக்க தயங்கியபோதும், ரிஷி சுனக் தனது பொருளாதார யுக்தியால் திட்டத்தை அமல்படுத்தினார். இந்த திட்டம் மூலம் கொரோனா காலத்தில் பணிகள் நடைபெறாதபோது அரசும், தனியார் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்களுக்கு 80 சதவீத ஊதியத்தை வழங்கின.
இதன்மூலம் ரிஷி சுனக் இங்கிலாந்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். இப்படி பல்வேறு வரலாறுகளை படைத்த ரிஷி சுனக் கடைசியாக இங்கிலாந்து பெண் பிரதமர் லிஸ் டிரஸ் தலைமையிலான மந்திரிசபையில் நிதி மந்திரியாக இருந்தார். தற்போது லிஸ் டிரஸ் தனது பதவியை ராஜினாமா செய்தபிறகு அந்நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷி சுனக்கிற்கும், கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபரும், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனருமான நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதாவிற்கும் (42) கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு அனுஷ்கா, கிருஷ்ணா என 2 மகள்கள் உள்ளனர். தற்போது அவர்கள் இங்கிலாந்தின் யார்க்சைர் நகரில் வசித்து வருகிறார்கள். மேலும் இந்துவான ரிஷி சுனக் அங்குள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வழிபட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் தமிழ்நாடு முதலிடம் : தமிழக அரசு பெருமிதம்
11 May 2025சென்னை : பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிட
-
இந்தியா - பாக். போர் நிறுத்தம் எதிரொலி: எல்லையில் மெதுவாகதிரும்பும் இயல்புநிலை
11 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று முன்தினம் மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
-
5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
11 May 2025ஊட்டி : 5 நாட்கள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் வரும் 15-ம் தேதி அங்கு மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டில் வரும் 14, 15ம் தேதிகளில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 May 2025சென்னை : தமிழகத்தில் வரும் மே 14,15ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
போரால் ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம்: திருமாவளவன்
11 May 2025சென்னை: போர் என்பது ஆயுத வியாபாரிகளுக்கு மட்டுமே லாபம் தரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
ஆபரேஷன் சிந்தூர் இந்திய ராணுவ உறுதியின் சின்னம் : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
11 May 2025லக்னோ : ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் அரசியல், சமூக மற்றும் ராணுவ மனஉறுதியின் சின்னம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை மத்திய அரசு உறுதி
11 May 2025புது டில்லி: பாகிஸ்தான் விவகாரத்தில் எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை இந்தியா விரும்பவில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
அன்னையர் தினத்தை முன்னிட்டு தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
11 May 2025சென்னை: நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
-
அன்னையர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 May 2025சென்னை : நாடு முழுவதும் நேற்று (மே 11) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
-
சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு
11 May 2025சென்னை : ஒத்திவைக்கப்பட்டுள்ள சி.ஏ. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை
11 May 2025சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அணைகளில் அடுத்த வாரம் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
11 May 2025சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.
-
பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் இந்தியாவின் பதிலடி கடுமையாக இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி எச்சரிக்கை
11 May 2025புதுடில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால், பதிலடி நிச்சயம் கடுமையாக இருக்கும் என அமெரிக்க துணை அதிபர் வான்சிடம், பிரதமர் மோடி கூறியதாக தகவல் வெளியாகி உ
-
தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்
11 May 2025புதுடெல்லி : தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்
-
ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது: இந்திய விமானப்படை அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலை நிறுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், செயல்பாடுகள் இன்னும் நடந்து வருவதாகவும், ஊகங்களை தவிர்க்குமாறும்
-
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: பிரதமருக்கு கார்கே, ராகுல் மீண்டும் கடிதம்
11 May 2025புதுடெல்லி : பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க உடனடியாக பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகி
-
அன்னையர் நாள்: த.வெ.க.தலைவர் விஜய் வாழ்த்து
11 May 2025சென்னை : அன்னையர் நாளையொட்டி தவெக தலைவர் விஜய் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
-
பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் முதலிடம்: தமிழக அரசு தகவல்
11 May 2025சென்னை: பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
வழக்கம் போல செயல்படுகிறது: டெல்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பு
11 May 2025புதுடெல்லி: டெல்லி சர்வதேச விமானநிலையம் வழக்கம் போல இயல்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மதுரையில் கள்ளழகருக்கு உற்சாக வரவேற்பு: எதிர்சேவையில் திரண்ட பக்தர்கள் இன்று காலை வைகை ஆற்றில் இறங்குகிறார்
11 May 2025மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க கள்ளழகர் கோயிலிருந்து புறப்பட்ட கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி த
-
இந்தியா, பாக். போர் நிறுத்தம்: புதிய போப் லியோ வரவேற்பு
11 May 2025வாடிகன்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு போப் லியோ வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
-
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி திடீர்துப்பாக்கிச்சூடு: இந்திய வீரர் காயம்
11 May 2025ஜம்மு : ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மும்பை: ஜூன் 9 வரை பட்டாசு வெடிக்க தடை
11 May 2025மும்பை : ராக்கெட் உள்பட எந்த வகையான பட்டாசுகளையும் வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம்: ட்ரம்ப் அறிவிப்பு
11 May 2025வாஷிங்டன்: காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு புடின் அழைப்பு
11 May 2025மாஸ்கோ: போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.