முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்தர்கள் நவம்பர் 5-ம் தேதி முதல் சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 5 நாள்களுக்கு தடை

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2022      இந்தியா
Sathuragiri 2022-11-03

Source: provided

சதுரகிரி: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு நவம்பர் 5 -ஆம் தேதி முதல் 5 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் வழிபட பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என மாதத்தில் 8 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வருகிற 8 -ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு, நவ. 5 -ஆம் தேதி முதல் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 29 -ஆம் தேதி பருவமழை தொடங்கியதை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு நாள்களாக மழை பெய்ததால், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி, வருகிற 5 -ஆம் தேதி முதல் 9 -ஆம் தேதி வரை 5 நாள்கள் சதுரகிரி கோயிலுக்குச் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என வனத் துறையினர் தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து