முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      இந்தியா
Siddaramaiah 2023 04 16

Source: provided

மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில்  கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.

மங்களூரு அருகேயுள்ள தர்மஸ்தலா பகுதியில் மண்ணுக்குள் சுமார் 100 பெண்கள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அடுத்தடுத்து சில திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

தர்மஸ்தலாவில் அமைந்துள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஷ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களுள் ஒன்றாகும். இந்த கோவில் ’ஜெயின் தர்மாதிகாரி மற்றும் பா.ஜ.க. ஆதரவுடன் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வீரேந்திர ஹெக்கடேவால்’ நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த கோவில் அருகேயுள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கர்நாடக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தின் தர்மஸ்தலாவில் 1998 - 2014 வரையிலான காலகட்டத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய ஒரு நபர், நிர்வாண நிலையில் இருந்த பல பெண்களின் உடல்களை மண்ணில் குழி தோண்டி புதைத்ததாக கடந்த சில நாள்களுக்கு முன்னர் பகிரங்கமாக புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், தர்மஸ்தலா காவல் நிலையத்தில் கடந்த ஜூலை 4-இல் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதியப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இச்சம்பவத்தின் தீவிரத்தன்மையை அறிந்து இது குறித்து கர்நாடக முதல்வரை அம்மாநில வழக்குரைஞர்கள் அமைப்பினர் கடந்த வியாழக்கிழமை கூட்டாகச் சந்தித்து  இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று தெரிவித்தனர். ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி வி. கோபால கௌடாவும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து, கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது. டி.ஜி.பி. ப்ரோனாப் மோகண்ட்டி தலைமையிலான இந்த குழுவில் காவல் துறை டிஐஜி எம். என். அனுசேத், டி.சி.பி. சௌமியலதா, எஸ்.பி ஜிதேந்திர குமார் தயாமா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இனி மேற்கண்ட வழக்கின் முழு விசாரணையை இக்குழு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து