முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரம் கோடி பயிர்க் கடன்; மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு 10,997 கோடி ரூபாய் கடன் : தமிழ்நாடு அரசு பெருமிதம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : பயிர்க் கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், கூட்டுறவுத்துறை மூலம் மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு 10,997 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

1844-ஆம் ஆண்டில் கூட்டுறவு இயக்கம் இங்கிலாந்து நாட்டில் ரோச்டேல் பயனீர் என்பவரால் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்டது. அதன்பின் உலகம் முழுவதும் பரவிய கூட்டுறவு இயக்கம் இந்தியாவில் 1904 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1932 ஆம் ஆண்டில் சென்னை மாகாண கூட்டுறவுச் சங்கங்கள் சட்டம் ஏற்படுத்தப்பட்டு கூட்டுறவு இயக்கத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்கப்பட்டது.

நகைக் கடன் தள்ளுபடி:-

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021 தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு குடும்பத்தில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்று 31.3.2021 வரை நிலுவையிலிருந்த நகைக் கடன் தொகை ஏறத்தாழ .6,000 கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்து ஆணையிட்டார்கள். அதன்படி, 11.70 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.4,904 கோடி அளவிற்குத் தள்ளுபடிச் சான்றிதழுடன், அவர்கள் அடமானம் வைத்த நகைகளும் திருப்பி வழங்கப்பட்டுள்ளன.

சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி:-

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில், 31.3.2021 அன்று நிலுவையில் இருந்த கடன் தொகை ரூ.2,118.80 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு 1,01,963 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 10,56,816 மகளிர் பயன்பெற்றுள்ளனர். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் உச்ச வரம்பு ரூ.20 லட்சம் என்பதை ரூ.30 லட்சமாக உயர்த்தி 1,90,499 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10,997.07 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

பயிர்க் கடன்கள்:-

பயிர்க் கடன்களை உரிய கெடு தேதிக்குள் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லாப் பயிர்கடன்களாக 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2021-2022ம் ஆண்டு முதல் கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த இதர பணிகளுக்குப் பராமரிப்புக் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப் படுத்தினார்கள். 11,88,440 விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் அதன் தொடர்புடைய பணிகளுக்காக ரூ.6,372.02 கோடி கடன் வழங்கியுள்ளது திராவிட மாடல் அரசு. ஆண்டிற்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் 19,358 கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.63.22 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்:-

மாற்றுத்திறனாளிகளைச் சுயசார்புடையவர்களாக மாற்றவும், நிதி சுதந்திரத்தை வளர்க்கவும், 47,221 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.225.94 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சமூக நீதியை மேம்படுத்தும் வண்ணம் 16,578 பணிபுரியும் பெண்களுக்கு ரூ.470.01 கோடியும், 49,000 மகளிர் தொழில் முனைவோருக்கு ரூ.283.27 கோடியும் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்டுப்புறக் கலைகளை வாழ்வாதாரமாகக் கொண்டு தொழில் புரிகின்ற கலைஞர்கள் நலிவடையாமல் காத்திட அக்கலைஞர்களின் சமூக, பொருளாதார, நிதி நிலையை மேம்படுத்தும் வண்ணம், இதுவரை 4,494 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.18.80 கோடி அளவிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

தானிய ஈட்டுக்கடன்- நகைக்கடன்:-

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், ரூ.392.52 கோடி அளவிற்குத் தானிய ஈட்டுக் கடன்களும்; ரூ.2,089.90 கோடி அளவிற்கு நகைக்கடன்களும் வழங்கியுள்ளன. இச்சங்கங்கள், ரூ.10,283.21 கோடி அளவிற்கு வணிகமும் செய்துள்ளன.

மாணவர்களின் கல்விக் கட்டணம்:-

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஆகிய இரு கூட்டுறவு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கான பயிற்சிக் கட்டணங்கள் 2021-2022, 2022-2023 ஆகிய ஆண்டுகளுக்கு ரூ. 38.50 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டது.

70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள்:-

2021-2022 சட்டமன்றப் பேரவை அறிவிப்பின்படி, முதல்வர் மு.க.ஸ்டாலினால் மாநிலம் முழுவதும் ஒரே விதமான வண்ணம் மற்றும் தனித்துவமான பெயர்ப் பலகைகளுடன் 70 புதிய மாதிரி கூட்டுறவு மருந்தகங்கள் 16.12.2021 அன்று திறந்து வைக்கப்பட்டு; ரூ. 39.87 கோடி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

1,000 முதல்வர் மருந்தகங்கள்:-

2024 ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா உரையில் தமிழ்நாடு முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும் எனவும் இதன் மூலம் ஜெனரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள், நியூட்டராசெட்டிகல்ஸ், இந்திய மருந்துகள் 25 சதவீத தள்ளுபடி விலையில் மக்களுக்கு வழங்கப்படும் எனவும் இத்திட்டத்தின்படி, தமிழ்நாடு முழுவதும் 1,000 மருந்தகங்கள் திட்டம் 24.2.2025 அன்று சென்னை மாநகரில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டன.

எல்லோர்க்கும் எல்லாம் என்னும் திராவிட மாடல் அரசின் கொள்கைப்படி கூட்டுறவு அமைப்புகள் தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவு பாதுகாப்பை உறுதி செய்கின்றன. விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க் கடன்கள் முதலான இடுபொருள்களை வழங்கி, அவர்களின் உற்பத்திப் பொருள்களுக்கு நியாயமான விலைகள் கிடைப்பதையும் உறுதி செய்து மத்திய அரசின் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று கூட்டுறவுத் துறை மூலம் தமிழ்நாடு இந்தியத் திருநாட்டில் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து