முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமனம்

புதன்கிழமை, 23 நவம்பர் 2022      தமிழகம்
Udayanidhi 2022-10-15

Source: provided

சென்னை : திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் திமுகவின் உட்கட்சித் தேர்தல் நடந்தது. இதில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கான நியமனங்களுக்கு அக்கட்சியின் பொதுக்குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு அணிகளுக்கான நியமனங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமைப்பு ரீதியாக திமுகவில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் உள்ளன.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின், மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன், மகளிர் அணி செயலாளராக ஹெலன் டேவிட்சன் ஆகியோர் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இளைஞர் அணி துணைச் செயலாளர்கள், மகளிர் அணி செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர்கள், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர்கள், மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர்கள், மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் மற்றும் மகளிர் ஆலோசனைக் குழு பொறுப்பாளர்கள் ஆகியோரின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

திமுக இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு குறித்து அவர் தெரிவிக்கையில்., "இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மிகப் பெரிய பொறுப்பாக பார்க்கிறேன்" என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து