எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் புதிதாக நிறுவப்பட்ட லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை திறந்து வைத்தார் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. பிறகு பேசிய அவர் லால் பகதூர் சாஸ்திரிக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் முழு உருவ வெண்கல சிலையை நேற்று காலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி.திறந்து வைத்தார். கவர்னர் திறந்து வைத்த லால்பகதூர் சாஸ்திரி சிலையின் உயரம் 9.5 அடியாகும். இந்த சிலையின் மொத்த எடை ஒட்டுமொத்தமாக 850 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவில் பேசிய தமிழக கவர்னர் ரவி கூறுகையில், ''இந்த விழாவில் கலந்து கொள்வதை, மிக கவுரவமாக கருதுகிறேன். லால் பகதூர் சாஸ்திரியின் முழு உருவ சிலையை நிறுவ நடவடிக்கை எடுத்த அனைத்து தரப்பினருக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். லால் பகதூர் சஸ்திரியை பொறுத்தவரை எளிமைக்கு பெயர் பெற்றவர். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை சந்தித்தாலும் தனது பொதுவாழ்வு கடமையில் தன்னை அர்பணித்தவர்.
இந்திய நாட்டுக்காக பல்வேறு பங்களிப்புகளை அளித்த இந்த தலைவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஜெய் ஜவான், ஜெய் கிஷான் முழக்கங்களை தந்தவர் இவர். நாட்டின் தேவைகளுக்கு முதன்மையளித்தவர் இவர். நமது நாட்டின் தேவைகள் தொடர்பாக தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


