முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய ராணுவ தளபதி நியமனம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      உலகம்
Syed-Azim-Munir-2022 11 24

பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரை நியமனம் செய்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். 

பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக உள்ள ஜெனரல் பஜ்வாவின் பதவிக் காலம் வரும் 29-ம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ராணுவ தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் தலைவர் பதவிக்கு நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்காக, ஆறு மூத்த அதிகாரிகளின் பெயர்களை ராணுவம் அனுப்பியுள்ளதாக பிரதமர் அலுவலகம் கூறியிருந்தது. 

இதில், இரண்டு பேர் அந்தப் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கூட்டுப் படைகளின் தலைவர் பதவிதான் உயர்ந்த பதவி ஆகும். இருப்பினும் அனைத்து முடிவுகளையும் ராணுவத் தளபதியே எடுப்பார். அவருக்குத் தான் அதிக அதிகாரம் உள்ளது. இந்தப் பதவிகளுக்கு உரியோரை, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுப்பார். 

இது தொடர்பாக, சமீபத்தில் லண்டனில் வசிக்கும் தன் சகோதரரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீபுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளபதியாக சயத் அசிம் முனீரையும், கூட்டுப் படைகளின் தலைவராக சாஹிர் ஷம்ஷட் மிர்சாவை நியமனம் செய்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து