முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாலிவுட் தரத்தில் உருவாகும் பாம்பாட்டம்

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      சினிமா
Mallika-jeevan 2022-11-28

Source: provided

பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரிப்பில் சி.வடிவுடையான் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பாம்பாட்டம். வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில் ராணியாக மல்லிகா ஷெராவத். நான் அவனில்லை பட புகழ் ஜீவன் இரட்டை வேடங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ்,தெலுங்கு,இந்தி மொழிகளில் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் நடிகர் ஆர்யா வெளியிட்டார். படம் குறித்து இயக்குனர் வி.சி.வடிவுடையான் பேசுகையில், இப்படத்தில் 120 அடி நீள ராட்சத பாம்பு ஒன்று ஹாலிவுட் தரத்தில் மிரட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றார். எல்லோருடைய வாழ்க்கையுமே ஒரு பரமபதம்தான். அதுபோல ஒரு சாம்ராஜ்யத்தின் பரமபத ஆட்டம்தான் இந்த பாம்பாட்டம் படத்தின் கதை என்றார். மேலும் ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் ப்ரியா, சுமன், கிரிக்கெட் விளையாட்டு வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு  இனியன் J ஹாரீஸ், இசை அம்ரிஷ், எடிட்டிங் சுரேஷ் அர்ஸ், கலை  C.E.சண்முகம், ஸ்டன்ட் சூப்பர் சுப்பராயன், நடனம் அசோக்ராஜா,மக்கள் தொடர்பு மணவை புவன், இணை தயாரிப்பு பண்ணை A.இளங்கோவன், தயாரிப்பு V.பழனிவேல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து