முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டல, மகரவிளக்கு சீசனில் தினமும் சபரிமலைக்கு 80 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதி : கேரள முதல்வர் பினராய் விஜயன் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2024      ஆன்மிகம்
Sabarimala 2023-11-17

Source: provided

திருவனந்தபுரம் : நடப்பு சபரிமலை சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள முதல்வர் பிரனாய் விஜயன் தெரிவித்துள்ளார். 

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ம் தேதி திறக்கப்படுகிறது. இதனையொட்டி சபரிமலையில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்க முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது:-

நடப்பு சபரிமலை சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களின் தேவைக்கு ஏற்ப தரமான அப்பம், அரவணை பிரசாதம் தட்டுப்பாடு இன்றி வழங்கப்படும். 

கூட்டம் அதிகமாகும் நாட்களில் பக்தர்கள் தங்கி ஓய்வெடுக்க வசதி செய்யப்படும். பாரம்பரிய காட்டு வழி நடைபாதையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். நிலக்கல் மற்றும் எருமேலியில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய கூடுதல் வசதி செய்யப்படும். 

சபரிமலை செல்லும் சாலைகள், பார்க்கிங் பகுதிகளில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த கூட்டத்தில் தேவஸ்தான அமைச்சர் வாசவன், தலைமை செயலாளர் சாரதா முரளீதரன், போலீஸ் டி.ஜி.பி. ஷேக் தர்வேஷ் சாகிப், கூடுதல் டி.ஜி.பி.க்களான மனோஜ் அபிரகாம், ஸ்ரீஜித், தேவஸ்தான சிறப்பு செய்லாளர் அனுமா, பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் பிரேம் கிருஷ்ணன், தேவஸ்தான தலைவர் பிரசாந்த் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து