முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருந்துளை ஒளி எதிரொலிகளை ஒலி அலையாக மாற்றிய நாசா

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2022      உலகம்
NASA 2022-11-28

அண்டத்தில் உள்ள கருந்துளையிலிருந்து வரும் ஒளிக்கற்றைகளின் எதிரொலிகளை ஒலி வடிவமாக நாசா வெளியிட்டுள்ளது.

சலனமற்று இருக்கும் ஏரி நீரில் சிறு கல்லை போட்டால் சிற்றலைகள் எழுவது போலவும், காதின் அருகே பேப்பரை வேகவேகமாக ஆட்டினால் காற்றில் அதிர்வு ஏற்பட்டு சப்தம் எழுவது போலவும் கால-வெளி (space-time) பரப்பில் நிறை கொண்ட பொருட்கள் நகரும்போது அந்த அதிர்வில் காலவெளி பரப்பு அதிர்ந்து ஈர்ப்பு அலைகளும், ஒளி அலைகளும் எழும் என்பது ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவம்.

இந்த நிலையில், நாசா கருத்துளையை சுற்றியுள்ள ஒளிக்கற்றைகளின் எதிரொலிப்புகளை ஒலி அலைகளாக மாற்றி வெளியிட்டுள்ளது. கருத்துளையின் ஒளி எதிரொலிப்புகளை நம்மால் உணர முடியாது. அதன் காரணமாகவே சோனிபிகேஷன் போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒலி வடிவமாக நாசா வெளியிட்டுள்ளது. இதனை நாசா தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நாசா தனது டுவிட்டர் பக்கத்தில், "கருந்துளைகள் அவற்றிலிருந்து ஒளியை (ரேடியோ, புலப்படும் மற்றும் எக்ஸ்-கதிர்கள் போன்றவை) வெளியேற விடாமல் தடுக்கின்றன. இருப்பினும், சுற்றியுள்ள பொருட்கள் மின்காந்த கதிர்வீச்சின் தீவிர வெடிப்புகளை உருவாக்கலாம். அவை, வெளிப்புறமாக பயணிக்கும்போது,விண்வெளியின் வாயு மற்றும் தூசு பரப்புகளிலிருந்து ஒளிக்கற்றைகள் சிதறும். இவை பூமியிலிருந்து 7,800 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து