எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் மூடப்பட்ட பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையில் டிசம்பர் 5-ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இசிஆர் சர்வதேச பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மரணம் அடைந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்தப் பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு எரித்தனர். இந்தக் கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்தப் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மாணவி மரணம் குறித்த புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனவே சம்பந்தப்பட்ட பள்ளியின் 'ஏ' பிளாக் கட்டிடம் விசாரணைக்கு தேவைப்படலாம்" என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் சிபிசிஐடி-யை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி, குறிப்பிட்ட அந்த கட்டிடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா என்பது குறித்தும், எப்போது புலன் விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி காவல்துறை தரப்பில், "விசாரணையை பெருமளவு முடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 3 மாதங்கள் தேவைப்படும். பள்ளியை திறக்க ஆட்சேபனை இல்லை. இரு பள்ளிகளையும் முழுமையாக திறப்பது குறித்து நீதிமன்றம் முடிவெடுக்கலாம். மூன்றாவது மற்றும் நான்காவது தளத்தை மட்டும் பயன்படுத்தக்கூடாது" என்றும் தெரிவிக்கப்பட்டது.
லதா கல்வி அறக்கட்டளை தரப்பில், "இசிஆர் பள்ளி மற்றும் சக்தி பள்ளி அகியவற்றில் பள்ளி மூடப்பட்டதால் மாணவர்களின் எண்ணிக்கை 3500-ல் இருந்து 1500 ஆக குறைந்துள்ளது. 15 நாட்களில் அரையாண்டு தேர்வு நடக்க உள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதிக்க வேண்டும்" என்றும் வாதிடப்பட்டது.
மரணமடைந்த மாணவியின் பெற்றோர் தரப்பில், "அனுமதி பெறாமல் விடுதியை இயக்கிய பள்ளியை திறக்க அனுமதிக்கக் கூடாது" என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழக்கறிஞர் எம்.எம்.ரவி என்பவர் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு பள்ளியை அரசு ஏற்று நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளி, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் தரப்பில் பள்ளியை திறக்க ஒப்புதல் அளித்தாலும், சின்னஞ்சிறு மழலைகள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள 9 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை நடத்த, சோதனை அடிப்படையில் ஒரு மாத காலத்திற்கு நேரடி வகுப்புகளை நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார். இசிஆர் பள்ளி மற்றும் சக்தி பள்ளி ஆகியவற்றில் டிசம்பர் 5-ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை தொடங்கலாம்.
பள்ளியில் உள்ள 'ஏ' மற்றும் 'பி' பிளாக்குகளை பயன்படுத்தலாம். ஆனால், 'ஏ' பிளாக்கில் விடுதி இயங்கி வந்த 3-ஆவது மாடியை பயன்படுத்தக்கூடாது. விடுதி அமைந்துள்ள தளத்தை மாவட்ட நிர்வாகம் சீல் வைக்க வேண்டும். அனுமதி அளிப்பது குறித்தும் உரிய முடிவெடுக்க வேண்டும். கூடுதல் பாதுகாப்பு வழங்குவது குறித்து பள்ளியுடன் ஆலோசித்து, அதற்கான தொகையை பெற்று காவல்துறை பாதுகாப்பு வழங்கலாம். தனியார் பாதுகாப்பு நிறுவனத்தை வளாக பாதுகாப்பில் ஈடுபடுத்துவது குறித்து பள்ளி நிர்வாகம் முடிவெடுக்கலாம். தீவைப்பில் மிகுந்த சேதமடைந்த 'சி' மற்றும் 'டி' பிளாக்குகளை பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு பின்னர், நீதிமன்றம் மீண்டும் அப்போதைய நிலையை ஆராயும் எனக் கூறி விசாரணையை ஜனவரி 2-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். எல்கேஜி முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையின் போது அறக்கட்டளை தரப்பில் வழக்கறிஞர் சாம்ராஜ், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சிலம்பண்ணன், சிபிசிஐடி தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, மாணவியின் பெற்றோர் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு, இடையீட்டு மனுதாரர் எம்.எல்.ரவி தரப்பில். வழக்கறிஞர் சிவஞானசம்பந்தம் ஆகியோர் ஆஜராகி வாதாங்களை முன்வைத்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
09 Jul 2025புதுடில்லி : தலைநகர் டில்லியில் உள்ள வீட்டில், தீயில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்
-
லார்ட்ஸ் மைதானம் - ஒரு பார்வை
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே இன்று 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள நிலையில் லார்ட்ஸ் மைதானம் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.
-
210 தொகுதிகளில் வெற்றி குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்: இ.பி.எஸ். குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில்
09 Jul 2025கரூர் : தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வதை, மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளா
-
அணிக்கு திரும்பினார் ஜோப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: மனம் திறந்த விராட் கோலி
09 Jul 2025லண்டன் : இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி.
-
இது அவரின் ஹனிமூன் காலம்: சுப்மன் கில் குறித்து கங்குலி
09 Jul 2025மும்பை : இது அவருடைய ஹனிமூன் காலம்.
-
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி? 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 3-வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-07-2025.
10 Jul 2025