முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை, யு.ஏ.இ. வெற்றி

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2025      விளையாட்டு
Sri-Lanka-win 2024-03-31

Source: provided

அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் திங்கட்கிழமை நடந்த 2 போட்டிகளில் இலங்கை, யு.ஏ.இ. வெற்றிப்பெற்றன. அடுத்த சுற்று வாய்பை இழந்தது ஓமன் வெளியேறியது.

பந்துவீச்சு தேர்வு...

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை- ஹாங்காங் அணிகள் விளையாடின. இதில் டாஸ் வன்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹாங்காங் அணியின் ஜீஷன் அலி, அன்ஷி ராத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜீஷன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ராத் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜீஷன் அலி 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் ஹயாத் 4 ரன்னில் வெளியேறினார்.

நிசாகத்கான் அபாரம்...

3-வது விக்கெட்டுக்கு அன்ஷி ராத் உடன் நிசாகத் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அன்ஷி ராத் 46 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மறுமுனையில் நிசாகத் கான் சிறப்பாக விளையாடி 36 பந்தில் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. இறுதியாக ஹாங்காய் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்துள்ளது.

இலங்கை வெற்றி...

150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பதும் நிஷாங்கா அதிரடியாக விளையாடி அரைசதமடித்தார். அவர் 68 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்துதடுத்து களமிறங்கியவர்கள் அணிக்கு தங்களது பங்களிப்பை செய்தனர். இறுதியில் இலங்கை அணி 18.5 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

172 ரன்கள் குவிப்பு...

மற்றொரு போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம்- ஓமன் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான அலிஷன் ஷரபு- கேப்டன் முகமது வாசீம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11 ஓவரில் 88 ரன்கள் குவித்த போது இந்த ஜோடி பிரிந்தது. ஷரஃபு 38 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வீரர்கள் தடுமாற்றம்...

வாசீம் 54 பந்தில் 69 ரன்கள் விளாசினார். முகமது சோகைப் 13 பந்தில் 21 ரன்களும், ஹரிஷித் கவுசிக் ஆட்டமிழக்காமல் 8 பந்தில் 19 ரன்களும் விளாசினர். ஓமன் அணியின் ஜித்தன் ராமநந்தி 2 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் 10 பந்தில் 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின் 4 வீரர்கள் தொடர்ந்து ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஓமன் 18.4 ஓவரில் 130 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

தொடரில் இருந்து... 

ஐக்கிய அரபு அமீரகம் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஓமன் இரண்டு போட்டிகளிலும் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. ஏறக்குறைய ஓமன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தியா 2 போட்டிகளில் இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான்- ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து