முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைஷாலிக்கு முதல்வர் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2025      விளையாட்டு
Vaishali-Pragnananda 2023-1

Source: provided

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) அசத்தியுள்ளார். இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார். சீன வீராங்கனை டான் ஸோங்கி உடனான 11 சுற்றுகள் நடைபெற்ற இறுதிப்போட்டியில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றுள்ளார். இதன்மூலம் இரண்டாவது முறையாக கிராண்ட் செஸ் தொடரை வைஷாலி வென்று அசத்தியுள்ளார்.

இந்த நிலையில், கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற பிடே கிராண்ட் செஸ் தொடரில் தனது நிதானத்தாலும் அபார ஆட்டத்தாலும் வென்று, வெற்றி மகுடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள 'நம்ம சென்னைப் பொண்ணு' வைஷாலிக்கு எனது பாராட்டுகள். இதன் மூலம் அவர் பெருமதிப்பு கொண்ட கேண்டிடேட்ஸ் (பெண்கள் பிரிவு) தொடருக்கும் தகுதிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது வைஷாலியின் தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, சென்னையின் வெற்றி, தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி! இதைப் பார்த்து, உலக அரங்கில் நம்மாலும் நமது கனவுகளை நனவாக அரங்கேற்ற முடியும் என ஊக்கம் பெறும் எண்ணற்ற இளம்பெண்களின் வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.

_________________________________________________________________________________________________

பாக்.கின் கோரிக்கை நிராகரிப்பு..?

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி. பொது மேலாளர் வாசிம் கானுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஆசிய கிரிக்கெட்டுக்கான போட்டி நடுவர் பணியில் இருந்து ஆன்டி பைகிராப்ட்டை உடனடியாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. மேலும் அவரை நீக்காவிட்டால் எஞ்சிய ஆசிய போட்டியில் இருந்து விலகிவிடுவோம் என பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் போட்டி நடுவர் பைகிராப்ட்டை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் வாரியத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் வாரியத்தின் கோரிக்கையை ஏற்க போதுமான காரணங்கள் இல்லை என ஐ.சி.சி. கருதுகிறது. மேலும் கைகுலுக்கும் சம்பவத்தில் பைகிராப்ட் குறைந்தபட்ச பங்கை மட்டுமே கொண்டிருந்தார் என்பதும், டாஸில் ஒரு கேப்டன் மற்றொரு கேப்டனுடன் கைகுலுக்க மறுத்தால் ஏற்படும் பொது சங்கடத்தைத் தவிர்க்கவே அவர் இதனை செய்திருக்கலாம் என்றும் ஐ.சி.சி. கருதுகிறது. எனவே இந்த விவகாரத்தில் ஐ.சி.சி., போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட்டுக்கு சாதகமான முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

_________________________________________________________________________________________________

பிரதமர் மோடிக்கு மெஸ்ஸி பரிசு

பிரதமர் மோடி  இன்று (17ம் தேதி) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி பிறந்தநாள் பரிசு அனுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் 75வது பிறந்தநாளுக்காக,  அவருக்கு  2022 ஆம் ஆண்டு உலககோப்பையை வென்ற அர்ஜென்டினா ஜெர்சியில் தனது கையொப்பமிட்டு பிரதமர் மோடிக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார். மெஸ்சி வருகிற டிசம்பர் மாதம் இந்தியா வருகிறார். மெஸ்ஸி டிசம்பர் 12-ந் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

_________________________________________________________________________________________________

அக்சர் படேலுக்கு இம்பேக்ட் வீரர் விருது 

ஆசிய கோப்பை தொடரில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.  முன்னதாக ஆசிய கோப்பையில் ஒவ்வொரு போட்டியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்திய வீரருக்கு அணி நிர்வாகம் சார்பில் ‘இம்பேக்ட் வீரர்’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அதன்படி இந்த போட்டியின் இம்பேக்ட் வீரராக அக்சர் படேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பந்துவீச்சில் 2 விக்கெட் மற்றும் பீல்டிங்கில் ஒரு கேட்ச் பிடித்து ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து