முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூக்குவழியாக செலுத்தும் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2022      இந்தியா
Vaccination-2022 12 23

கொரோனா தொற்றுக்கு மூக்கு வழியாக செலுத்தும் இரண்டு சொட்டு தடுப்பு மருந்தினை தடுப்பு மருந்து திட்டத்தில் சேர்க்க மத்திய அரசு நேற்று அனுமதி அளித்துள்ளது. கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பு மருந்தாக மூக்குவழி தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளலாம் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்டை நாடான சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.  சீனாவின் கொரோனா தாக்கம் இன்னும் இந்தியாவை வந்தடையாத நிலையில் குஜராத் மற்றும் ஒடிசாவில் நான்கு பேருக்கு சீனாவில் பரவி வரும் உருமாறிய ஓமிக்ரான் புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா தடுப்பூசி நடைமுறையை தீவிரப்படுத்தும் படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுத்தியுள்ளார்.

இந்தநிலையில், கொரோனா தடுப்பூசியுடன், பூஸ்டர் தடுப்பு மருந்தாக மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு நேற்று அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இரண்டு தடுப்பூசிகளுடன், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு சொட்டுகள் இன்கோவாக் மூக்குவழி செலுத்தும் தடுப்பு மருந்தும் சேர்க்கப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் உருவாக்கியுள்ள இந்தத்தடுப்பு மருந்து தற்போது தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும். கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் இந்த மூக்குவழி தடுப்பு மருந்தினை பூஸ்டர் டோஸாக எடுத்துக்கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில். பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த பண்டிகைக் காலங்களில் கொரோனா நடைமுறைகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

யாரெல்லாம் போடக்கூடாது ?

18 வயதுக்குள்பட்டவர்களுக்கும், கொரோனா தடுப்பூசி போடாதவர்களும், இதை செலுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்படவில்லை.தடுப்பூசிகளுக்கு நிகராக, இந்த தடுப்பு மருந்தும் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.இன்கோவாக் மருந்து தயாரிப்பது, மற்ற தடுப்பூசி தயாரிப்பை விடவும் செலவு குறைவாகும். இந்த மருந்தை சேமிப்பது, பல இடங்களுக்கும் கொண்டு செல்வது மற்றும் செலுத்துவது அனைத்தும் எளிதானது.

அதிகபட்சமாக, இந்த மருந்து, ஒரு மனிதனின் எந்த உடல்பாகத்தில் கொரோனா வைரஸ் நுழைகிறதோ, அந்த இடத்திலேயே தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. மூக்குள் உள்பக்கம் மற்றும் மூச்சுக்குழாயின் மேல் பகுதியில், இந்த வைரஸ் தொற்று தாக்காமல் தடுக்கும் வகையில் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கனவே கொரோனா இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள், முன்னெச்சரிக்கை தவணையாக செலுத்திக் கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து