முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவகவுடா பேரன் குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      இந்தியா
Prajwal-Revanna 2025-08-01

பெங்களூரு, வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடகாவின் ஹசன் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மூன்று பாலியல் வன்கொடுமை வழக்குகள், ஒரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு என 4 வழக்குகள் உள்ளன. எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளுக்கான சிறப்பு அமர்வு நீதிமன்றம் ரேவண்ணாவின் வழக்குகளை விசாரித்து வருகிறது.

இதில், ரேவண்ணாவின் குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் உதவியாளராக இருந்த 48 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு விசாரணை கடந்த மே 2-ம் தேதி தொடங்கியது. நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் வழக்கை விசாரித்து வந்தார். மூத்த வழக்கறிஞர்கள் அசோக் நாயக் மற்றும் பி.என். ஜெகதீஷா ஆகியோர் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணை தினசரி நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்து, பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை குற்றவாளி என நேற்று  தீர்ப்பு அளிக்கப்பட்டது. தண்டனை குறித்த வாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், தண்டனை விவரம் இன்று (ஆகஸ்ட் 2) அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து