முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ பேட்டி

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      தமிழகம்      அரசியல்
CM-Vaiko 2025-08-01

சென்னை,  “2026 தேர்தலில்  தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” என வைகோ  தெரிவித்துள்ளார்.

2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரேமலதா விஜயகாந்த், ஓ.பி.எஸ். மற்றும் வைகோ என வரிசையாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரின் மகன் துரை வைகோ ஆகியோர் சந்தித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்திருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரிக்க அவரின் வீட்டிற்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, முதல்வரின் உடல்நலம் குறித்து வைகோ விசாரித்தார் என சொல்லப்படுகிறது.

 பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மு.க.முத்து மறைவு குறித்து துக்கம் விசாரித்தேன். அதோடு, முதல்வர் ஸ்டாலினின் உடல்நலம் குறித்தும் விசாரித்தேன். அவர் மருத்துவமனையிலும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருந்தார்.

கவின் படுகொலையில் அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன். காவல்துறை என்ன தான் உடனுக்குடன் கைது நடவடிக்கை எடுத்தாலும், ஆணவக்கொலைகளை தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது. இது குறித்து முதல்வரிடம் வலியுறுத்தினேன்.

2026 தேர்தலில்  தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடமில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து