முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Okanagal 2023-07-26

Source: provided

பென்னாகரம் : ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வந்த மழையின் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. கர்நாடக அணைகளின் பாதுகாப்புக் கருதி காவிரி ஆற்றில் சுமார் ஒரு லட்சம் வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்து வருவதால் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவுகளும் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து சரிய தொடங்கியுள்ளது. காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது வியாழக்கிழமை நிலவரப்படி வினாடிக்கு 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கன அடியாக குறைந்ததது.

தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நீர்வரத்து சரிந்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு 5 நாள்களுக்குப் பிறகு மாவட்ட கலெக்டர் ரெ.சதீஸ் அனுமதி அளித்துள்ளார்.

இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. காவிரி கரையோர பகுதிகளில் வருவாய் துறையினர், காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து