முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் வரி விதிப்பு விவகாரம்: யு.ஏ.இ., அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 1 ஆகஸ்ட் 2025      இந்தியா
Modi 2023-09-11

Source: provided

புதுடில்லி : டிரம்ப் வரி விதிப்பு விவகாரம் குறித்து ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உடன் பிரதமர் மோடி போனில் ஆலோசனை நடத்தினார்.

ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் டிரம்ப், அந்த வர்த்தகத்தை கைவிடுமாறு, நேரடியாகவும், மறைமுகமாகவும் பல முறை எச்சரிக்கை விடுத்தார்.அதற்கு இந்திய அரசு செவி சாய்க்காத நிலையில், இப்போது இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தை சமாளிப்பது குறித்து மத்திய அரசு, தொழில் வர்த்தகத்துறையினருடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய அரசு அமீரகம் எனப்படும் யு.ஏ.ஓ., நாட்டின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி போனில் பேசினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

அப்போது இந்தியாவின் நீண்ட கால பிரதமராக 2வது இடத்தில் இருக்கும் மோடிக்கு, ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக நாடுகளுக்கு வரி விதித்து வரும் டிரம்ப் நடவடிக்கை, அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள், அதை சமாளிக்க என்ன செய்வது என்று இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

பாகிஸ்தானில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ள நிலையில் யு.ஏ.இ., அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தியது முக்கியத்துவம் பெறுகிறது. யு.ஏ.ஓ., மட்டுமின்றி, சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட அனைத்து வளைகுடா நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி, நெருக்கமான தொடர்புகளை பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து