முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பனையேறிகளின் வாழ்வியலைச் சொல்லும் நெடுமி

சனிக்கிழமை, 21 ஜனவரி 2023      சினிமா
Nedumi 2023 01 21

Source: provided

ஹரிஸ்வர் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரிப்பில் நந்தா லட்சுமணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நெடுமி. இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பேரரசு, நடிகர் பயில்வான் ரங்கநாதன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய  படத்தின் நாயகன் பிரதீப் செல்வராஜ், இந்தப் படத்தில் பனைமரம் ஏற எனக்கு 10 நாட்கள் பயிற்சி கொடுத்தார்கள். அதன் பிறகு மரமேறி எளிதாக நடித்தேன் என்றார். இயக்குநர் நந்தா லட்சுமணன் பேசும்போது, குறும்படங்கள் ஆல்பங்கள் என்று எடுத்து சினிமா பற்றி எதுவும் தெரியாத எனக்கு வாய்ப்பு கொடுத்து இந்தப் படத்தைத் தயாரித்த எனது மாமா வேல்முருகனுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை என்றார். பின்னர் பேசிய தயாரிப்பாளர் வேல்முருகன்,  இந்தப் படம் நாம் மறந்துவிட்ட பல விஷயங்களைப் நினைவூட்டுகிறது என்றார். ஆக்சன் ரியாக்சன் நிறுவனத்தின் சார்பில் படத்தை வெளியிடும் ஜெனிஸ் பேசும்போது,  "பனை மரம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்குச்  சொந்தமான ஒன்றல்ல. ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்குச் சொந்தமானது. பனையின் நிலை இன்று எப்படி இருக்கிறது என்று இந்தப் படத்தைப் பார்த்தால் தெரியும். சின்ன படம் என்றாலும் நடிப்பாலும் சொல்லப்படும் விஷயத்தாலும் இந்தப் படம் உயர்ந்து தரமான படமாக இருக்கிறது" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து