முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று கடைசி ஒருநாள் போட்டி: நியூசிலாந்தை மீண்டும் வீழ்த்தி நம்பர் 1 அணி ஆகுமா இந்தியா?

திங்கட்கிழமை, 23 ஜனவரி 2023      விளையாட்டு
India 2023 01 23

Source: provided

இந்தூர் : நியூசிலாந்துக்கு எதிராக இன்று இந்தூரில் இன்று நடைபெறும் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றிப்பெற்று ஒருநாள் அணிக்கான தரவரிசையில் இந்திய அணி நம்பர் 1 இடத்திற்கு மீண்டும் முன்னேறுமா என்ற ஆவல் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.

கடைசி ஒருநாள்...

சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றது. இதற்கு அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. 3-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம், இந்தூரில் இன்று நடைபெறவுள்ளது.

3-வது இடத்தில்...

டி20 தரவரிசையில் முதலிடத்திலும் டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திலும் இந்திய அணி உள்ளது. ஒருநாள் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளது. எனினும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என இந்திய அணி வென்றால் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துவிடும். அது நடந்துவிட்டால் டி20, ஒருநாள், டெஸ்ட் என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் முதல் 2 இடங்களில் உள்ள ஒரே அணி என்கிற பெருமையை இந்திய அணி அடையும்.

இங்கி., முன்னேற்றம்...

2-வது ஒருநாள் ஆட்டத்தில் அடைந்த தோல்வியால் ஒருநாள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது. இங்கிலாந்துக்கு முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் முதல் 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்ட நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது. 

வலுவான நிலை...

முதல் போட்டியில் இந்தியா பேட்டிங்கில் அசத்திய நிலையில், 2வது போட்டியில் பவுலர்கள் மிரட்டினர். சுப்மன்கில் சூப்பர் பார்மில் உள்ளார். ரோகித்சர்மா, கோலி, சூர்யா, பாண்டியா என வலுவான பேட்டிங் வரிசை உள்ளது. பவுலிங்கில் சிராஜ் மிரட்டி வருகிறார். தொடரை கைப்பற்றிவிட்டதால் இன்று சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலாம்.

ம்ரான் மாலிகிற்கு... 

சிராஜ், அல்லது ஷமிக்கு பதிலாக உம்ரான் மாலிக் ஆடும் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஷாபாஸ் அகமது, சாஹல் காத்திருக்கின்றனர். இன்றும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா களம் இறங்கும். மறுபுறம் நியூசிலாந்து முதல் போட்டியில் கடைசி வரை போராடிய நிலையில், 2வது போட்டியில் பேட்டிங்கில் நிலைகுலைந்தது. இன்று ஆறுதல் வெற்றிக்காக போராடும். அந்த அணியில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை. காயத்தில் இருந்து மீண்டால், இஷ் சோதி ஆட வாய்ப்பு இருக்கிறது.

116-வது முறை...

இரு அணிகளும் இன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் 116வது முறை சந்திக்க உள்ளன. இதற்கு முன் மோதிய 115 போட்டிகளில் இந்தியா 57, நியூசிலாந்து 50 போட்டிகளில் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. 7 போட்டி ரத்தாகி உள்ளது. 

ராசியான மைதானம்...

இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம் இந்தியாவுக்கு ராசியான மைதானமாகும். இங்கு இதுவரை இந்தியா (இங்கிலாந்துக்கு எதிராக 2, ஆஸி, தெ.ஆ, வெ.இண்டீசுக்கு எதிராக தலா 1) 5 ஒரு நாள் போட்டிகளில் ஆடி அனைத்திலும் வென்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்து 3, சேசிங்கில் இரண்டில் வென்றுள்ளது. பேட்டிங்கிற்கு சாதகமான இந்த பிட்சில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக இந்தியா 2011ல் 418/5 ரன் குவித்தது தான் அதிகபட்சம். அந்த போட்டியில் சேவாக் இரட்டைசதம் (219ரன்) விளாசினார்.

புதிய சாதனைக்கு வாய்ப்பு..?

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் தற்போது இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, இந்தியா இதே புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இன்று இந்தியா வெற்றிபெறும் பட்சத்தில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறும். 

டி.20 தரவரிசையிலும் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இன்று வென்றால் ஒயிட்பால் கிரிக்கெட்டில் இரண்டிலும் முதல் இடம் பிடித்த அணி என்ற சாதனையை நிகழ்த்தும். பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து