முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: ஒருநாள் கூட பங்கேற்காத இளையராஜா

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      இந்தியா
Ilayaraja 2023 01 24

Source: provided

புதுடெல்லி : மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். 

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இந்த கூட்டம் 13 நாட்கள் வரை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவை உறுப்பினர்களின் வருகை பதிவு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, நியமன எம்.பி.க்களில் தடகள வீராங்கனை பி.டி.உஷா 13 நாட்கள் குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஒரு விவாதத்திலும் கலந்துகொண்டார். வீரேந்திர ஹெக்டே 5 நாட்களும், விஜயேந்திர பிரசாத் 2 நாட்களும் கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளனர். 

தமிழ்நாட்டிலிருந்து நியமிக்கப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா கூட்டத்தொடரின் ஒருநாள் கூட பங்கேற்கவில்லை. அவருடைய வருகைப்பதிவு பூஜ்ஜியமாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டு இருந்தநிலையில் குளிர்கால கூட்டத்தொடரில் ஒருநாள்கூட பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து