முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழைப் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கும் திட்டம் : ம.பி. முதல்வர் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      இந்தியா
Shivraj-Singh 2023 01 29

Source: provided

போபால் : பொருளாதார ரீதியில் ஏழ்மையில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச முதல்வரின் இந்தப் புதிய திட்டம் குறித்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. 

நர்மதை நதிக்கரையில் உள்ள நர்மதாபுரம் நகரத்தில் பேசிய அவர் இந்தத் திட்டம் குறித்து அறிவித்தார்.  இந்தத் திட்டத்தின் கீழ் அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கோடி செலவிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் புதிய திட்டம் குறித்து அவர் பேசியதாவது,

நாங்கள் ஏழைப் பெண்களுக்காக இந்தப் புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்த உள்ளோம். இந்த  திட்டத்தின் மூலம் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்கள் பயனடைவர். மாதம் 1000 ரூபாய் என ஒரு ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. அனைத்து ஏழைப்பெண்களும் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறுவர். 

அரசின் பிற திட்டங்களில் பயன்பெறுபவர்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் உதவித் தொகை வழங்கப்படும். நான் என்னுடைய சகோதரிகளை பொருளாதார ரீதியில் சக்தி வாய்ந்தவர்களாக மாற்ற விரும்புகிறேன். அவர்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருந்தால் அவர்களது குடும்பம் சக்தி வாய்ந்ததாக மாறும். குடும்பம் சக்தி வாய்ந்ததாக அமைந்தால் சமூகம் சக்தி வாய்ந்ததாக மாறும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து