முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்காட்லாந்தில் நெருப்பு திருவிழா கோலாகலம் தீப்பந்தம் ஏந்தி குழந்தைகள், பெண்கள் பேரணி

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      உலகம்
Festive 20221 02 02

Source: provided

லண்டன்: ஸ்காட்லாந்தில் பாரம்பரியமான நெருப்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தீப்பந்தம் ஏந்த பெண்கள், குழந்தைகள் பேரணியாக சென்றனர். 

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற பாரம்பரிய நெருப்புத் திருவிழாவில் இந்தாண்டு குழந்தைகளும், பெண்களும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தில் 1803 முதல் 1815-ம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்ற நாளை ஒவ்வொரு ஆண்டும் நெருப்பு திருவிழாவாக அம்மக்கள் கொண்டாடி வருகின்றனர். 142 ஆண்டுகள் பாரம்பரிய மிக்க இந்த நெருப்பு திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில் பாலின கட்டுப்பாடுகளை தளர்ந்தும் விதமாக இந்தாண்டு குழந்தைகளும், பெண்களும் பங்கேற்றனர். 

போர் வீரர் போன்ற உடை அணிந்து வந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். ஜியனிக் வானவேடிக்கை காட்சிப்படுத்துதல், பெரிய நெருப்புத் தூண்கள், டார்ட்லைட் அணிவகுப்புக்கள் மற்றும் எரிமலைகளின் முகத்திலிருந்த பயமின்மை காட்சிகள் ஆகியவை இங்கிலாந்தின் நெருப்பு திருவிழாவின் பருவத்தின் அனைத்து பகுதிகளாகும். பின்னர், டிராகன் வடிவ படகை தீ வைத்து எரித்து நெருப்பு திருவிழாவை அவர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து