Idhayam Matrimony

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: கைதான 7 பேருக்கு மீண்டும் ஒரு வாரம் போலீஸ் காவல் பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு

வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2023      தமிழகம்
Station 20221 02 02

Source: provided

சென்னை: கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதானவர்களில் 7 பேரை மீண்டும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக இதுவரை 11 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்களில் 5 பேரை கடந்த ஜனவரி மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள், காவலில் எடுத்து விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக மீண்டும் 7 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி இளவழகன், கைதான முகமது அசாரூதீன் (23), பைரோஸ் (28), நவாஸ் (26), அப்சர்கான் (28), முகமதுதவ்பீக் (25), சேக்இதயதுல்லா (42), சனோபர் அலி (28) ஆகிய 7 பேரையும் 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். போலீஸ் காவல் முடிந்து வருகிற 8-ந் தேதி மீண்டும் 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

இதையடுத்து 7 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விசாரணைக்காக அழைத்து சென்றனர். சென்னை, கோவை, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 7 பேரையும் அழைத்து சென்று விசாரணை செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து