Idhayam Matrimony

தைப்பூச திருவிழா: திருத்தணி கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      ஆன்மிகம்
Murugan 2023 02 05

Source: provided

திருத்தணி : தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார். 

திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி எடுத்து வந்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். 

இந்நிலையில் மத்திய தகவல் தொடர்பு இணை அமைச்சர் எல். முருகன் தனது மகனுடன் திருத்தணி முருகன் கோவிலுக்கு வந்து வி.ஐ.பி. தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எல். முருகன் கூறியதாவது, 

உலகத் தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படுவது தைப்பூச திருவிழா. கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி திருத்தணி முருகன் கோவிலுக்கு வேல் யாத்திரை நடத்தினோம். வேல் யாத்திரையின் முக்கிய கோரிக்கையாக தமிழக அரசுக்கு தைப்பூச திருநாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தோம். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தைப்பூச விழாவை அரசு விடுமுறை நாளாக அறிவித்தது வேல் யாத்திரையின் வெற்றியாக கருதப்பட்டது. முருகப்பெருமானின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய இணை அமைச்சர் வருகையொட்டி கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து