முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச பேருந்து திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 40 லட்சம் பெண்கள் பயணம்: அமைச்சர்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      தமிழகம்
Sivashankar 2022 12 -09

Source: provided

ஈரோடு : நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்து வருகின்றனர் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். 

ஈரோட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஆதரவு கேட்டு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பெண்களுக்கு இலவச பயணம், புதுமை பெண் திட்டம் போன்றவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இலவச பேருந்து திட்டத்தில் இதுவரை 233 கோடியே 71 லட்சம் முறை பெண்கள் அரசு பஸ்சில் இலவச பயணம் செய்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 40 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்து வருகின்றனர். இலவச பேருந்து பயண திட்டம் ஏழை பெண்களுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது. இதன் மூலம் 800 முதல் ஆயிரம் ரூபாய் வரை குடும்பத்திற்கு மிச்சப்படுகிறது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து