முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதானி குழும விவகாரம்: விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 7 பெப்ரவரி 2023      இந்தியா
Supreme 20221 02 02

Source: provided

புதுடெல்லி : அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் பெரும் தொழிலதிபரான அதானியின் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றன.

இந்த நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை விசாரிக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பிப்ரவரி 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்போவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்ன்பெர்க் நிறுவனம் அதானி குறித்து மொத்தம் 413 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு ஆய்வு செய்ய மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து