முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்கள் குறித்த வலைதள தகவல்கள் தவறானவை : தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2023-01

Source: provided

சென்னை : தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4136 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரவுப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதாக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் தவறானவை என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.

இந்நிலையில், 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு கல்லூரிக் கல்வியியல் சேவையில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4136 உதவிப் பேராசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் மே 15-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்ற அறிவிப்பு வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்த நிலையில் வலை தளங்களில் பகிரப்பட்டு வரும் உதவிப் பேராசிரியர் காலியிடங்களுக்கு அறிவிப்பு தவறான தகவல் என்றும், இதுபோன்ற போலியான அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், அறிவிப்பு குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான  http://trb.tn.nic.in இல் இதுவரை வெளியிடப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 6 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 5 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 6 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து