முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் பாகிஸ்தான் முன்னிலை

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      உலகம்
Pak 2023 03 20

Source: provided

கான்பெரா : சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலில் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னிலையில் உள்ளன. 

உலக நாடுகளை அச்சுறுத்தும் நிகழ்வுகளில் பயங்கரவாதம் முக்கியமான ஒன்றாகும். இது பொதுமக்களின் அமைதியை முற்றிலும் சீர்குலைக்கிறது. அது மட்டுமின்றி ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும் சவாலாக உள்ளது. எனவே பயங்கரவாதத்தை தடுக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஐ.நா. மற்றும் பல தனியார் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. 

அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமைதி மற்றும் பொருளாதாரத்துக்கான நிறுவனம் சர்வதேச பயங்கரவாத குறியீட்டு பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகியவை முன்னிலையில் உள்ளன. 

தெற்கு ஆசியாவில் அதிக பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்ற நாடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் முதல் இடத்தை பிடித்திருந்தது. தற்போது அந்த இடத்தை பாகிஸ்தான் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் இது 6-வது இடமாகும்.  கடந்த 2022-ல் மட்டும் பயங்கரவாத சம்பவங்கள் மூலம் அங்கு 643 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து