முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி பாதிப்பு மேலும் அதிகரிப்பு- புதிதாக 1,300 பேருக்கு கொரோனா பாதிப்பு

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      இந்தியா
Corona-2023-03-23

Source: provided

புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 718 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரத்து 997 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 7,605 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களுக்கு முன் 646 ஆக இருந்த நிலையில் நேற்று முன்தினம் 1,134 ஆக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 334 பேர், குஜராத்தில் 247 பேர், கேரளாவில் 172 பேர், கர்நாடகாவில் 105 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 99 ஆயிரத்து 418 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 718 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரத்து 997 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 7,605 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றைவிட 579 அதிகமாகும். கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,816 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து