முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்ரித்பால் சிங்குக்கு அடைக்கலம் கொடுத்த பாட்டியாலா பெண் கைது

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      இந்தியா
Amritpal-Singh 2023 03 19

Source: provided

சண்டிகர் : அம்ரித்பால் சிங்குக்கு 6 மணி நேரம் அடைக்கலம் கொடுத்த பாட்டியாலா பெண்ணை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர். 

வாரீஸ் பஞ்சாப் டே அமைப்பின் தலைவரும் காலிஸ்தான் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி அஜ்னாலா காவல் நிலையத்திற்குள் தடையை மீறி, தடுப்பான்களை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தனர். 

அம்ரித்பாலின் நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை விடுவிக்க கோரி பயங்கர ஆயுதங்கள், நவீன ரக துப்பாக்கிகளுடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இதையடுத்து அம்ரித்பாலை கைது செய்ய 7 மாவட்டங்களை சேர்ந்த மாநில போலீசார் அடங்கிய ஒரு சிறப்பு படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வந்தது. நேபாளம் வழியாக அவர் தப்பிச் செல்லலாம் என உளவு அமைப்புகள் தெரிவித்ததை அடுத்து நேபாள எல்லைப் பகுதிகள் உஷார்படுத்தப்பட்டன. 

இந்த நிலையில் அம்ரித்பால் சிங் ஒரு தெருவில் நடந்து செல்லும்போது சன்கிளாஸ் அணிந்து தொலைபேசியில் பேசும் காட்சிகள் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி உள்ளது. பின்னர் அம்ரித்பால் சிங் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த வழக்கில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளருக்கு அடைக்கலம் கொடுத்ததாக பாட்டியாலாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்

கடந்த 19-ம் தேதி பாட்டியாலா ஹர்கோபிந்த் நகரைச் சேர்ந்த பல்பீர் கவுர் என்ற பெண், அவரது இடத்தில் அம்ரித்பால் மற்றும் அவரது உதவியாளர் பப்பல்பிரீத் சிங் இருவருக்கும் சுமார் 6 மணி நேரம் அடைக்கலம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் அரியானாவின் குருக்ஷேத்ரா மாவட்டத்தில் உள்ள ஷஹாபாத்துக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து பல்பீர் கவுரை போலீசார் கைது செய்துள்ளனர். அம்ரித்பால் சிங்குக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக நடைபெறும் இரண்டாவது கைது நடவடிக்கை இது என்று போலீசார்  தெரிவித்துள்ளனர். முன்னதாக, தேஜிந்தர் சிங் கில் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து