முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிலிப்பைன்சில் கப்பலில் தீ விபத்து: 12 பயணிகள் பலி

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      உலகம்
Philippines-Ship-fire 2023

பிலிப்பைன்சில் கப்பலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 12 பயணிகள் பரிதாபமாக பலியாயினர். 

பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள மிண்ட னாவ் தீவின் ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவுக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். 

இந்த கப்பல் பலுக் தீவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. கப்பலில் தீ வேகமாக பரவியதால் பயணிகள் அலறினர். பலர் கடலில் குதித்தனர். கடலோர காவல்படை மீனவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

கப்பலில் இருந்த பயணிகளை சிறிய படகுகளில் ஏற்றினர். மறுமுனையில் கப்பலில் எரிந்த தீயை அணைத்து கடலோர காவல் படை கப்பலில் இருந்து தண்ணீர் அடிக்கப்பட்டது. இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உள்பட 12 பேர் பலியானார்கள். 7 பேர் மாயமாகி உள்ளனர். 

கப்பலில் இருந்து 230 பயணிகளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து