முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் இன்று முதல் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றலாம்: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது ரிசர்வ் வங்கி

திங்கட்கிழமை, 22 மே 2023      இந்தியா      வர்த்தகம்
Rupees 2000

மும்பை, நாடு முழுவதும் வங்கிகளில் இன்று முதல் 2,000 ரூபாய் பொது மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கி, நோட்டுகளை மாற்றும் போது வங்கிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 

செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி கடந்த 3 தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வருகிற 23-ந் தேதி (இன்று) முதல் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்வதற்கு வரும் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் ஒரு நபர் ஒரே நேரத்தில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2000 நோட்டுகளை மாற்றுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வங்கிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி இன்று முதல் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம். இதற்காக வங்கிகளில் தனி கவுண்டர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன.

கோடைக் காலம் என்பதால் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் வசதி, காத்திருப்பு அறை, நிழலில் காத்திருக்கும் வசதிகளை வழங்க வேண்டும் என்றும் ரூ.2000 நோட்டுகள் குறித்த அன்றாட தரவுகளை பராமரிப்பதோடு, கேட்கும் போது விவரங்களை வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் ரூ.2000 நோட்டுகளை வழங்குவதற்கான படிவத்தையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், "ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறும் நடவடிக்கை வழக்கமான நடைமுறைதான். ரூ.1000, ரூ.500 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதால் உடனடி தேவைக்காக ரூ.2,000 நோட்டுகள் வழங்கப்பட்டன. உயர்மதிப்புள்ள ரூ.2,000, ரூ.500 நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களில் எந்த குறைபாடும் இல்லை. ரூ.2,000 நோட்டுகள் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. நோட்டுகள் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியை முடித்துவிட்டன. இது ரிசர்வ் வங்கியின் கரன்சி மேலாண்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதி என்பதை தெளிவுபடுத்துகிறேன். 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் அவசரப்பட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 2 weeks 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 week ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 week ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து