முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலக்கை எட்ட முடியவில்லை; ஆர்சிபி-யை ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி' - கோலி ட்வீட்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2023      விளையாட்டு
Virat-Kohli 2023 05 23

Source: provided

பெங்களூரு : நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், விராட் கோலி அது குறித்து நெகிழ்ச்சியான ட்வீட் செய்துள்ளார். இதில் ஆர்சிபி அணியை ஆதரித்த ரசிகர்களுக்கு தனது நன்றியை அவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் ஐபிஎல் சீசன் தொடங்கும் போதும், நடைபெறும் போதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வெல்ல வேண்டும் என அந்த அணியின் கோடான கோடி ரசிகர்கள் விரும்புவார்கள். ‘ஈ சாலா கப் நம்தே’ என்ற முழக்கத்தையும் முன்வைப்பார்கள். ஆனாலும் 2008 சீசன் முதல் இதுவரை ஒருமுறை கூட ஆர்சிபி சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அதனால் ரசிகர்களுக்கு எஞ்சியது ஏமாற்றம் மட்டுமே.

நடப்பு சீசனில் கேப்டன் டூப்ளசி, விராட் கோலி, மேக்ஸ்வெல், சிராஜ் போன்ற வீரர்கள் ஆர்சிபி அணிக்காக சிறப்பான செயல்பாட்டை கொடுத்தனர். ஆன போதும் அந்த அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது.

“மறக்க முடியாத தருணங்களை கொண்டுள்ள சீசன். இருந்தாலும் துரதிர்ஷ்டவசமாக நமது இலக்கை நம்மால் அடைய முடியாமல் போனது. அது ஏமாற்றம் தான். இருந்தாலும் நம் தலையை உயர்த்தி பிடிப்போம். ஒவ்வொரு படியிலும் அணியை ஆதரித்த மெய்யான ரசிகர்களுக்கு நன்றி” என விராட் கோலி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து