முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவேகானந்தரின் நெருங்கிய சீடரான நிவேதிதாவின் முழு உருவச்சிலை : விம்பிள்டனில் ஜுலை-1-ல் திறப்பு

புதன்கிழமை, 24 மே 2023      உலகம்
London 2023-05-24

Source: provided

லண்டன் : விம்பிள்டன் நகரில் சுவாமி விவேகானந்தரின் நெருங்கிய சீடரான சகோதரி நிவேதிதாவின் ஆளுயர சிலை ஜூலை 1-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

மேற்கு வங்கம், சா்காச்சி ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தின் செயலா் சுவாமி விஸ்வமயானந்தஜி வடிவமைத்து, பிரபல சிற்பி நிரஞ்சன் செதுக்கிய சகோதரி நிவேதிதாவின் 6.2 அடி உயர சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டுள்ளது.

அயா்லாந்தில் கடந்த 1867-ம் ஆண்டு பிறந்து, இங்கிலாந்தில் வளா்ந்த சகோதரி நிவேதிதாவின் இயற்பெயா் மாா்கரெட் எலிசபெத் நோபிள் ஆகும். ஏழை மக்களுக்காக விம்பிள்டன் நகரில் பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தி வந்த சகோதரி நிவேதிதா, சுவாமி விவேகானந்தரை தனது ஆன்மிக குருவாக ஏற்றுக் கொண்டு இந்தியாவுக்கு வந்தடைந்தார். 

பெண்கள் முன்னேற்றம், சுதந்திரப் போராட்டம் என பல்வேறு சமூக பணிகளில் முக்கிய பங்காற்றி இந்தியாவிலேயே தனது முழு வாழ்நாளை கழித்தார்.  

இந்நிலையில், இந்தியாவில் பெண்கள் முன்னேற்றத்துக்காக சகோதரி நிவேதிதா ஆற்றிய பங்களிப்பை நினைவுகூா்ந்து விம்பிள்டன் நகரில் அமைந்துள்ள ரிசா்ட் லாட்ஜ் உயா்நிலை பள்ளி வளாகத்தில் சகோதரி நிவேதிதாவின் முழு உருவச்சிலை அமைக்கப்பட உள்ளது.

பிரிட்டனில் அமைந்துள்ள சகோதரி நிவேதிதா அறக்கட்டளை, பிதான் நகா் ராமகிருஷ்ண விவேகானந்த கேந்திரா, கொல்கத்தாவின் சத்யஜித் சக்ரவா்த்தி பொறியியல் பல்கலைகழகம் ஆகியோரின் கூட்டு முயற்சியாலும், நிதி பங்களிப்பாலும் சகோதரி நிவேதிதா சிலை விம்பிள்டன் நகரில் நிறுவப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து