முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவிற்கு டிரோன்கள் வழங்குவதை ஈரான் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கோரிக்கை

வியாழக்கிழமை, 25 மே 2023      உலகம்
Jelensky-2023 03 23

கீவ், ரஷ்யாவிற்கு ஆபத்தான டிரோன்களை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஈரானிடம் அதிபர் ஜெலென்ஸ்கி கேட்டுக்கொண்டுள்ளார். 

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் உதவியோடு உக்ரைன் எதிர்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில் ரஷ்யா, சமீப காலமாக, ஈரானில் இருந்து தயாரிக்கப்பட்ட ஷாஹெட் வகை டிரோன்களை கொண்டு உக்ரைனின் நகரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  கூறுகையில், 

ரஷ்ய பயங்கரவாதத்திற்கு உடந்தையாக இருப்பதில் உங்கள்(ஈரான்) ஆர்வம் என்ன?. இவ்வாறான தாழ்ந்த செயல்களை செய்வதால் ஈரானுக்கு என்ன பயன்.? உக்ரைனை பயமுறுத்தும் உங்கள் ஷாஹெட்ஸ், டிரோன்களால், ஈரான் மக்கள் வரலாற்றின் இருண்ட பக்கத்திற்கு ஆழமாக தள்ளப்படுகிறார்கள் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

மேலும், ரஷ்யாவிற்கு ஆபத்தான டிரோன்களை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ஈரானிடம் அதிபர் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 12 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து