முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய பாராளுமன்றம் திறப்பு: கே.எஸ். அழகிரி கண்டனம்

வியாழக்கிழமை, 25 மே 2023      தமிழகம்
KS-Alagiri-1 2023 04 09

Source: provided

சென்னை: சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய பாராளுமன்றத்தை திறப்பது இந்தியர்களுக்கு செய்யும் துரோகம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

உலகமே வியந்து போற்றுகிற அற்புதமான பாராளுமன்ற கட்டிடம் கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வருகிற நிலையில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை மிக அருகாமையிலேயே ரூ. 850 கோடிக்கு மேலாக செலவிட்டு கட்டிடம் கட்டுவது துக்ளக் ஆட்சியைதான் நினைவுபடுத்துகிறது. 

புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. 

பாராளுமன்ற இரு அவைகளின் தலைவராக இருப்பவர் ஜனாதிபதி. பாராளுமன்ற கூட்டத் தொடரை கூட்டவும், முடிக்கவும் உரிமை படைத்தவர் ஜனாதிபதி. பாராளுமன்றத்தில் இயற்றப்படுகிற மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்தால் தான் அது சட்டமாக நிறைவேறும். 

ஜனாதிபதிக்கு அரசமைப்பு சட்டம் வழங்கியிருக்கிற உரிமைகளை உதாசீனம் செய்கிற வகையில் அவரை புறக்கணித்து விட்டு பிரதமர் மோடியே புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது அரசமைப்பு சட்டத்தையும் ஜனாதிபதியையும் அவமதிக்கிற செயலாகும். 

எனவே தான் 28-ம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து புறக்கணித்திருக்கின்றன. பிரதமர் மோடியின் ஜனநாயக விரோத பாசிச செயலுக்கு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்திற்குக்கின்றன. புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்கான தேதியான 28-ம் தேதிதான் சாவர்க்கர் பிறந்தநாள். 

இந்திய விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பதை விட இந்திய மக்களுக்கு செய்கிற துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து