முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் வரலாற்றை மாற்றிய 2 அணிகள்..!

வியாழக்கிழமை, 25 மே 2023      விளையாட்டு
25-Ram-52

Source: provided

சென்னை: ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் குஜராத், லக்னோ அணிகளை வென்று சென்னை, மும்பை அணிகள் வரலாற்றை மாற்றியுள்ளனர்.

குஜராத் சாம்பியன்...

ஐபிஎல் தொடரின் கடைசி சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் புதிதாக அறிமுகமானது. குஜராத் அணி கலந்து கொண்ட முதல் சீசனிலேயே கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்நிலையில், 4 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை அணியை கடந்த சீசனில் இரண்டு முறையும், நடப்பு சீசனில் ஒரு லீக் போட்டியிலும் எதிர்கொண்ட குஜராத் அணி 3 முறையும் வெற்றி பெற்றது.

முதல் 4 இடங்களில்...

அதேபோல், 5 முறை சாம்பியனான மும்பை அணியை இதுவரை 3 லீக் போட்டிகளில் எதிர்கொண்ட லக்னோ அணி 3 முறையும் வெற்றி பெற்றிருந்தது. குஜராத்தை சென்னையும், லக்னோவை மும்பையும் ஐபிஎல் வரலாற்றில் வென்றதில்லை என்ற சூழல் நிலவியது. இந்நிலையில், இந்த சீசனில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

குஜராத்தை வீழ்த்தியது...

பிளே ஆஃப்பின் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத்தை சென்னை அணியும், எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை மும்பை அணியும் வென்று வரலாற்றை மாற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, குஜராத் அணியை கடந்த 2 சீசன்களில் எந்த அணியும் ஆல்-அவுட் செய்ததில்லை என்ற நிலையில், குவாலிஃபையர் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியது சென்னை அணி.

ஞாயிற்றுக்கிழமை....

சென்னை அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், குஜராத் - மும்பை அணிகள் மோதும் குவாலிஃபையர் இரண்டாம் சுற்றில் வெற்றிபெறும் அணி சென்னை அணியுடன் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து