முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இறுதிப்போட்டியில் இன்று குஜராத்துடன் மோதல்: 5-வது முறை சாம்பியன் ஆகுமா சென்னை அணி? : பரிசுத்தொகை விவரம் வெளியீடு

சனிக்கிழமை, 27 மே 2023      விளையாட்டு
Chennai-Gujarat 2023 05 27

Source: provided

சென்னை : விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 16வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கான குவாலிபயர் 2 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ஏற்கனவே, பிளே ஆப் சுற்றில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு நுழைந்த சென்னையை களத்தில் சந்திக்க குஜராத் அணியும் குவாலிஃபயர் 2 வெற்றியின் மூலம் தயாராகவுள்ளது.

5-வது முறை...

இதன் மூலம் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது. இறுதிப்போட்டியில் வெல்லும் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும். சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் 1 முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியின் முடிவில் குஜராத் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லுமா ? அல்லது நடப்பு சாம்பியனிடம் இருந்து பட்டத்தை சென்னை தன்வசமாக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

முதலிடம் பிடிக்கும் ...

முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடியும் வழங்கப்படும். 3வது (மும்பை) 4வது (லக்னௌ) அணிக்கு முறையே ரூ. 7 கோடி, 6.5 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.46.50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களில் இதை விடவும் அதிகப் பரிசுத் தொகை வழங்கலாம் என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வளர்ந்துவரும் வீரர்... 

2008 இல் பரிசுத்தொகை முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.4.8 கோடியும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.2.4 கோடியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி அதிக ரன்கள் அடித்தவர்களுக்கு (ஆரஞ்சு கேப்), அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களுக்கு (பர்பிள் கேப்) தலா 15 இலட்சமும், வளர்ந்துவரும் வீரர் விருதிற்கு ரூ.20 இலட்சமும் வழங்கப்படுகிறது. மதிப்புமிக்க வீரர் விருது- ரூ. 12 இலட்சம், சூப்பர் ஸ்டிரைக்கர் விருது - ரூ.15 இலட்சம், கேம் சேஞ்சர் விருது -ரூ. 12 இலட்சம் வழங்கப்பட உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 11 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து