முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறது காங்கிரஸ்

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      இந்தியா
Jairam-Ramesh- 2023-06--01

Source: provided

புதுடெல்லி: பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் பிகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதிஷ் குமார் ஈடுபட்டு வருகிறார். முன்னதாக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து சில நாள்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அனைத்து எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் மாபெரும் கூட்டம் பாட்னாவில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்றும், கட்சி சார்பில் யார் பங்கேற்பார் என்று விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும், திரிணமூல், திமுக, ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, சிவசேனை(உத்தவ் தாக்கரே அணி), இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து