முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: நாசர் உசேனின் லெவனில் ஜடேஜாவுக்கு இடமில்லை

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      விளையாட்டு
1-Ram-52

Source: provided

சென்னை: இந்தியா- ஆஸ்திரேலியா அணியை இணைத்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் உசேன் 11 கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார். அதில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு இடம் இல்லை.

2019-ல் அறிமுகம்... 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் (ஐ.சி.சி.) 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் வருகிற 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

4 இந்திய வீரர்கள்...

இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணியை இணைத்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான நாசர் உசேன் 11 கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார். அதில் இந்திய அணி வீரர்கள் 4 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக ரோகித் சர்மா இடம் பெற்றுள்ளார். அதை தவிர விராட் கோலி, அஸ்வின், முகமது சமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அணி விவரம்...

அந்த அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:- ரோகித் சர்மா (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேமரூன் கிரீன், அலேக்ஸ் கேரி, அஸ்வின், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், முகமது ஷமி.

10-வது வீரராக... 

இது குறித்து நாசர் உசேன் கூறியதாவது.,  பேட் கம்மின்ஸ் எளிதான தேர்வாக இருந்தது. ஸ்டார்க் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக இருப்பதாலும், ஒவ்வோரு பந்தையும் மாறுபட்டு (variation) வீசுவதாலும் அவரை 10-வது வீரராக தேர்வு செய்தேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி துணைக் கண்டத்திலோ அல்லது இந்தியாவிலோ நடந்தால், நான் ஜடேஜாவை தேர்வு செய்திருப்பேன். ஆனால் இந்த போட்டி இங்கிலாந்தில் நடப்பதால் அவரை தேர்வு செய்யவில்லை. ஆல்-ரவுண்டராக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை தேர்வு செய்வேன். அவர் 8-வது இடத்தில் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து