எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக மந்திரியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து தேசிய சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தெரிவித்தனர். மல்யுத்த வீராங்கணைகளுக்கு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகள் வந்த வண்னம் உள்ளன.
இந்த நிலையில், தற்போது மல்யுத்த வீராங்கணைகளுக்கு கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 1983ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த விவகாரம் தொடர்பாக கூட்டாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அந்த அறிக்கையில், எங்களது சாம்பியன்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்பட்டு உள்ளனர். பதக்கம் வென்ற வீரர், வீராங்கணைகள் நடத்தப்படும் விதம் கவலையளிக்கிறது. மேலும், பதக்கங்களை தூக்கி எரிவது போன்ற கடினமான முடிவுகளை எடுக்கவேண்டாம் என அவர்கள் மல்யுத்த வீரர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
________________
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதியில் இந்திய வீரர்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென் மலேசியாவின் ஜே.எச். லியோங்-ஐ எதிர்கொண்டார். இதில் இந்திய வீரர் லக்சயா சென் சிறப்பாக விளையாடி மலேசிய வீரரை வீழ்த்தினார்.
முதல் செட்டை 21-19 எனவும், 2-வது செட்டை 21-11 எனவும் கைப்பற்றி நேர்செட்டில் வெற்றி பெற்றார். மற்றொரு வீரர் கிரண் ஜார்ஜ் 16-21, 17-21 என நேர்செட் கணக்கில் பிரான்ஸ் வீரரிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.
________________
வெஸ்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளராக ஹூப்பர் நியமனம்
10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் ஜூலை 9-ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் 4 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா, 'பி' பிரிவில் முன்னாள் சாம்பியன் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றை அடையும். இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு வெண்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹூப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தகுதி சுற்றுக்கு முன்னதாக அணியில் இணையவுள்ளார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடி உள்ளார். 329 சர்வதேச போட்டிகளில் விளையாடி 10,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஹூப்பர் பல்வேறு நிலைகளில் பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.
________________
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்தியா வெற்றி பெறும்: ஹைடன்
டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் ஜூன் 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி லண்டனில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது., ஓவல் மைதானம் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக இருக்காது. அது இங்கிலாந்தில் இருக்கும் வழக்கமான பவுன்ஸ் மைதானங்களை விட சற்று அதிக சவாலாகவே இருக்கும். அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்காது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் அதிகமாக கை கொடுக்காது.
மேலும் 2013-க்குப்பின் ஐசிசி கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்பதை மறந்து விட்டு இந்தியா செயல்பட்டால் வெற்றி காணலாம். அது திறமையைப் பற்றிய கேள்வி கிடையாது. மாறாக எந்த மனதுடன் அவர்கள் விளையாடுகிறார்கள் என்பதை பொறுத்தது. இப்போட்டியின் முடிவை பற்றி கவலைப்படாமல் செயலில் சிறப்பாக செயல்படுங்கள் என்பதே இந்திய அணிக்கு என்னுடைய ஆலோசனையாகும். இவ்வாறு அவர் கூறினார்.
________________
முதல் ஒருநாள் போட்டி: இலங்கை அபார வெற்றி
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இலங்கை 10 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி ஆடியது. இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 46.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 269 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூக்லம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பிரட் குலாப் ஜாமுன்![]() 1 day 21 hours ago |
சில்லி கார்லிக் சீஸ் பிரெட்![]() 5 days 23 hours ago |
சில்லி சப்பாத்தி![]() 1 week 1 day ago |
-
மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரைவில் சட்டமாக்கப்பட்டு வரும் 2024 தேர்தலிலே அமல்படுத்த வேண்டும் : தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
20 Sep 2023புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரைவில் சட்டமாக்கப்பட்டு, வரக்கூடிய 2024 மக்களவைத் தேர்தலில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வல
-
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்த வேண்டும் : ஆதரவு தெரிவித்து பேசிய சோனியா வலியுறுத்தல்
20 Sep 2023புதுடெல்லி : மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
-
எதிர் கட்சிகளின் இன்டியா கூட்டணியிலிருந்து சி.பி.எம். கட்சி திடீர் விலகல்
20 Sep 2023டெல்லி : எதிர் கட்சிகளின் இன்டியா கூட்டணியிலிருந்து சி.பி.எம். கட்சி விலகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2023.
21 Sep 2023 -
ஐசிசி ஒருநாள் தரவரிசை: முகமது சிராஜ் முதலிடம்
20 Sep 2023புதுடில்லி : ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டிகளுக்குப் பிறகு முகமது சிராஜ் உலகின் நம்பர் 1 ஒருநாள் பந்து வீச்சாளராக ஆனார்.
-
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: இந்திய ஆடவர் அணியின் புதிய 'ஜெர்சி' வெளியீடு
20 Sep 2023புதுடெல்லி : உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது.
10 அணிகள் ...
-
உலகக்கோப்பை: பாடல் வெளியீடு
20 Sep 202350 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது.
-
சென்னை ஓட்டுநர் வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9,000 கோடி ரூபாய்
21 Sep 2023சென்னை, தனது வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 9 ஆயிரம் கோடி ரூபாயை கண்டு சென்னையில் கார் ஓட்டுனர் ஒருவர் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்.
-
விதிகளை மீறி ஆடை அணிந்தால் பெண்களுக்கு 10 ஆண்டு ஜெயில் ஈரான் அரசு அதிரடி உத்தரவு
21 Sep 2023டெக்ரான், விதிகளை மீறி ஆடை அணிந்தால் பெண்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் மசோதா ஈரான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
-
வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக இம்ரான்கான் மீது மேலும் ஒரு வழக்கு
21 Sep 2023லாகூர், வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக இம்ரான்கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
-
சுவிட்சர்லாந்தில் பெண்கள் புர்கா உடை அணிய தடை
21 Sep 2023சூரிச், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து பொதுவெளிகளில் பெண்கள், தங்கள் முகத்தை மறைக்க அணியும் புர்கா போன்ற உடைகளுக்கு தடை விதிக்கும், சட்டத்தை அமல்படுத்தி உள்ளது.&n
-
ஐ.நா. வில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவுக்கு இங்கிலாந்து ஆதரவு
21 Sep 2023நியூயார்க், இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஐ.நா.
-
பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு: இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை
21 Sep 2023நியூயார்க், பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து இருதரப்பு உறவுகளை பற்றி பேசினார்.
-
2024-ல் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அதிபர் ஜோபைடனுக்கு அழைப்பு
21 Sep 2023புது டெல்லி, 2024-ல் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அதிபர் ஜோபைடனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
ஆதி சங்கராச்சாரியாருக்கு ம.பி.யில் 108 அடி உயர சிலை: முதல்வர் சவுகன் திறந்து வைத்தார்
21 Sep 2023போபால், இந்து மதத்தின் தற்போதைய கட்டமைப்பை உருவாக்கிய இந்து மத குருக்களில் முதன்மையானவர்களாக கருதப்படும் பலரில் ஆதி சங்கராச்சாரியார் ஒருவர்.
-
நிபா வைரஸ்: ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். அனுமதி: கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்
21 Sep 2023திருவனந்தபுரம், நிபா வைரஸ் பாதிப்பை கண்டறிய ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் அளித்துள்ளதாக கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்
-
ஆந்திர சட்டசபையில் பரபரப்பு: தொடையை தட்டி சவால் விட்ட நடிகர் பாலகிருஷ்ணா
21 Sep 2023திருப்பதி, ஆந்திர சட்டசபை நேற்று கூடிய போது முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் பாலகிருஷ்ணா தொடையை தட்டி சவால் விட்ட சம்பவம் பெரும்
-
விஜயவாடா - சென்னைக்கு புதிய வந்தே பாரத் ரெயில் வரும் 24-ம் தேதி முதல் இயக்கம்
21 Sep 2023திருப்பதி, ஆந்திர மாநிலம் விஜயவாடா - சென்னை இடையே புதிய வந்தே பாரத் ரெயில் வருகிற 24-ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.
-
பாராளுமன்ற வரலாற்றில் பொன்னான தருணம்: மகளிர் மசோதா குறித்து பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2023புது டெல்லி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியதற்காக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, பாராளுமன்ற வரலாற்றில் இது
-
நிலவில் இன்று துவங்கும் பகல் பொழுது: விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் விழித்தெழுமா? இஸ்ரோ விஞ்ஞானிகள் எதிர்பார்ப்பு
21 Sep 2023சென்னை, நிலவில் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் விண்கலன்கள் விரைவில் விழித்தெழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருப்பதியில் இன்று கருட சேவை: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
21 Sep 2023திருப்பதி, பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று கல்ப விருட்ச வாகன சேவை நடந்த நிலையில் இன்று கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
-
கனடா நாட்டுடனான உறவில் விரிசல்: விசா வழங்கும் சேவையை நிறுத்தி இந்தியா நடவடிக்கை
21 Sep 2023புது டெல்லி, கனடா நாட்டுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், விசா வழங்கும் சேவையை நிறுத்தி இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
-
முதல்வர் சித்தராமையா தலைமையில் மத்திய அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்த கர்நாடக அமைச்சர்கள் குழு
21 Sep 2023புது டெல்லி, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மற்றும் கர்நாடக அனைத்துக் கட்சி எம
-
டெல்லி ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக ராகுல்: வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
21 Sep 2023புது டெல்லி, டெல்லி ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளி உடை அணிந்து, பயணிகளின் உடைமைகளை ராகுல் காந்தி சிறிது தூரம் தூக்கி சென்றார்.
-
சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா: சோனியா, மம்தாவுக்கு கனிமொழி அழைப்பு
21 Sep 2023சென்னை, சென்னை நந்தனத்தில் அக்டோபர் 14-ம் தேதி நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா